23.1 C
Munich
Tuesday, August 9, 2022

இயற்கை விந்தைகளில் நம்ப முடியாத உயிரினம் ககபோ பற்றிய அதிசிய தகவல்

Must read

சட்டென்று பார்த்தவுடன் கிளி போன்று இருக்கும். முகத்தை உற்று பார்த்தால் ஆந்தை போன்று காணப்படும்.

தூரத்திலிருந்து பார்த்தால் கோழி போன்று காணப்படும். மூன்று இணைந்த உயிரினம் போல் காணப்படும் ஆந்தைகிளி.

நியூசிலாந்து காடுகளில் சுற்றி திரியும் ககபோதான் உலகிலேயே பறக்காத கிளி இனம். இது பார்ப்பதற்கு கோழி போன்று நிலத்திலேயே சுற்றி திரியும்.

இந்த ககபோவின் கலர் மஞ்சளும் பச்சையும் கலந்தாற்போன்று காணப்படும். நீளமான கூர்மையான அலகு காணப்படும்.

மற்றும் நீளமான சாம்பல் நிறத்தில் கால்கள் இருக்கும். அதுமட்டுமின்றி சிறிய இறக்கை மற்றும் குட்டிகால்களுடன் ககபோ காணப்படும்.

பார்ப்பதற்கு பயங்கரமாக காணப்படும் ககபோ பரம சாதுவான பறவை. நன்றாக வளர்ந்த ககபோ 4 கிலோ வரை வளரக்கூடியவை.

இது பார்ப்பதற்கு கோழி போன்று இருக்கும். நல்ல இயற்கையான சூழ்நிலையில் வளர்ந்தால் 100 வருடங்கள் வரை வாழக்கூடியவை.

 

ககபோவிற்கு மிகவும் இலகுவான இறகுகள். ஆனால் அதன் கால்கள் மிகவும் வலுவானவை. அதன்மூலம் எவ்வளவு உயரம் வேண்டுமனாலும் தாவக்கூடியவை.

எந்தவிட பிடிமானமும் இல்லாமல் தன்னிச்சையாக நிற்கக்கூடியவை. அதுமட்டுமின்றி அதன் சிறகுகள் பாராசூட் போன்று நிலத்தில் கீழே இறங்க உதவும்.

தனக்கு ஏதேனும் ஆபத்து நிகழப்போவது என உணர்ந்தால் அந்த இடத்தில் அப்படியே கல் போன்று நின்றுவிடும். ஆனால் பல மணிநேரத்திற்கு அப்படியே நின்றுவிடும். ஆனால் கழுகுகளிடம் மட்டும் எப்படியும் சிக்கிக் கொள்ளும்.

 

இந்த பறவை இரவு நேரங்களில் மட்டுமே அதிகமாக சுற்றித்திரியும். பகல் முழுவதும் மரத்தின் உச்சியிலோ அல்லது பொந்துகளிலோ நன்றாக படுத்து உறங்கும். இரவு நன்றாக சுற்றித் திரியும்.

இந்த கிளி தன்னோட இனத்தின் மற்றொரு கிளி எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் எளிதாக கண்டுபிடித்துவிடும். அது எப்படியென்றால் அதன்மேல் வீசும் நறுமணம்.

ஆனால் இதுவே இதற்கு ஆபத்தாகவும் அமைந்துவிடும். இதன்மேல் வீசும் வாசத்தை வைத்து கழுகுகளும் பாம்புகளும் இதனை எளிதாக வேட்டையாடி விடும்.

பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக தெரிந்தாலும் சுத்த சைவம். கிளிகள் என்ன சாப்பிடுகிறதோ அதனையை இந்த கிளிகளும் சாப்பிடும்.

 

கோழிகள் மாதிரி அடிக்கடி ஏதேனும் கொறிக்கும். எப்பொழுதாவது அரிதாக சின்னச்சின்ன புழுக்களை சாப்பிடும்.

ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் இந்த ககபோவை இறைச்சிக்காக வளர்த்துள்ளனர். அதற்குபிறகு அதனை அப்படியே விட்டுவிட்டனர்.

அதனால் காடுகளில் இவை அதிகமாக சுற்றி திரிகின்றன. மனிதர்களை பார்த்தாலும் ஜாலியாக பழகும்.

19ம் நூற்றாண்டில் இந்த கிளி இனத்தினை இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் அதிகமாக வேட்டையாடியதால் இதன் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துவிட்டன.

அதன்பிறகு 1980ம் ஆண்டுமுதல் நியுசிலாந்து அரசாங்கம் இதனை பாதுகாப்பதற்காக புதிய சட்டங்களை மேற்கொண்டனர். இதன்மூலம் தற்போது பாதுகாப்பாக உள்ளது.

இனப்பெருக்க காலங்களில் ஆண் ககபோ 4 கி.மீ தூரம் வரை சென்று ஒரு நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு குழி தோண்டி அங்கு நடனமாடுமாம். அதனை பார்த்த பெண் ககபோக்கள் அழகில் மயங்கி சந்தோஷப்படுமாம்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article