Home கட்டுரை அழகும் ஆரோக்கியமும் நிறைந்த செம்பருத்தி பூவைப் பற்றிய டக்கரான தகவல்

அழகும் ஆரோக்கியமும் நிறைந்த செம்பருத்தி பூவைப் பற்றிய டக்கரான தகவல்

0

அழகாகவும் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ள பூ என்றால் அது செம்பருத்தி மட்டுமே. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் செம்பருத்தி பூவை மாணவர்கள் படிக்கும் பாடத்தில் முக்கிய இடம்பிடித்துள்ளது.

கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்த பூ அதிகளவில் சீனாவில் தான் வளர்கிறது. அதன்பிறகு பல நாடுகளுக்கு பரவி நாடு முழுவதும் காணப்படுகிறது. இந்த பூவிற்கு சீனரோஜா என்ற பெயரும் உண்டு.

தற்போது செம்பருத்தி இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகளவில் வளர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி தற்போது அதிகளவில் ஏற்றுமதியாகும் பூவும் இதுதான். இதன் மதிப்பை உணர்ந்த மலேசிய அரசாங்கம் செம்பருத்தி பூவை தங்களது தேசிய பூவாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் செம்பருத்தி பூ பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளன என பல ஆய்வு குறிப்புகள் தெரிவித்துள்ளன. இதன் தமிழ் பெயர் செம்பரத்தை. செம்பரத்தை என்ற பெயர்தான் நாளடைவில் செம்பருத்தி என பெயர் பெற்றுள்ளது.

செம்பருத்தி பூவில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று அடுக்கடுக்காக இருக்கும். மற்றொன்று ஒரே அடுக்கில் அகலமாக இருக்கும். இதில் ஒரே அடுக்கில் அகலமாக இருக்கும் பூவில் தான் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

செம்பருத்தி பூவின் மகரந்த சேர்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதனால்தான் இதனை அதிகளவில் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதன் அறிவியல் பெயர் Hibiscus rosa-sinensis.

செம்பருத்தி பூவில் அதிகளவில் அமிலங்கள் குளூக்கோசைடுகள் கேரட்டீன் இதுபோன்று நிறைய வேதிப்பொருட்கள் இருக்கும். இவை அனைத்து மனிதர்களுக்கு மிகவும் பயன்படக் கூடியவை. இதனால் அனைத்துவிதமான அழகு சாதனப்பொருட்களிலும் செம்பருத்தி பூ சேர்க்கப்படுகின்றன.

இன்றைய கால உணவுப்பொருட்களின் மூலம் மனிதர்களுக்கு வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் அதிகளவில் ஏற்படுகின்றன. இதற்கு சரியான தீர்வு செம்பருத்தி பூ மட்டுமே. தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 5 செம்பருத்தி பூ மென்று திண்று வந்தால் வயிறு மற்றும் வாய்ப்புண் குணமாகிவிடும்.

செம்பருத்தி பூவின் மற்றொரு நன்மை என்னவென்றால் இவற்றை நமது உடலில் சேர்ப்பதனால் கெட்ட கொழுப்பு மற்றும் இரத்த கொதிப்பை குறைக்கும். அதனால்தான் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் செம்பருத்தி பூவை அதிகளவில் சேர்க்கப்படுகின்றன.

செம்பருத்தி பூவை தலைமுடி பிரச்சனைக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் செம்பருத்தியில் உள்ள கேரட்டீன் தலைமுடியை வலுமையாக்குகிறது. அதனால்தான் ஷாம்ப்பூ மற்றும் எண்ணெய்யில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

உடலில் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களை செம்பருத்தி பூவின் மூலம் சரிசெய்யலாம். செம்பருத்தி பூவை காயவைத்து அதனை பொடியாக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் துரும்பாக உள்ள உடம்பு இரும்பாக வலு பெற்றுவிடும்.

செம்பருத்தி பூவை நமது ஊரில் அழகு சாதனமாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இதனை ஒரு முக்கியமான உணவாக சாப்பிட்டு வருகின்றனர்.

Exit mobile version