11ம் நூற்றாண்டில் தற்போது உள்ள ஐதராபத்தில் வெறும் மலைப்பகுதிகளாக இருந்துள்ளது.
அங்கு ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் மலை மீது ஏறும் போது அங்கு ஒரு சாமி சிலையை பார்த்துள்ளான். அந்த செய்தி ஊர் முழுவதும் காட்டுத்தீ போன்று பரவியுள்ளது.
அந்த செய்தி அப்போதுள்ள காகதிய ராஜா வரை சென்றுள்ளது. காகதிய ராஜா நேரடியாக அந்த மலைக்கு சென்று பார்த்ததில் மிரண்டு போயுள்ளார்.
அங்கேயே ஒரு கோட்டை கட்ட முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளார். காகதிய சாம்ராஜ்யத்திற்கு மிகப்பெரிய அரணாக இந்த கோட்டை விளங்க வேண்டும் என முடிவு செய்து கட்ட ஆரம்பித்தனர்.
ஆடு மேய்த்த சிறுவன் கண்டுபிடித்த மலை என்பதற்கு தெலுங்கில் கொல்லா கொண்டா என அர்த்தமாகும். அதையே அந்த மலைக்கும் கோட்டைக்கும் பெயராக வைத்து விட்டனர். அதுவே நாளடைவில் கோல்கொண்டா என மாறியது.
கோல்கொண்டா மலை 10 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ளது. கோட்டைக்குள்ளே நான்கு கோட்டைகள் அமைந்துள்ளது.
இந்துக்கள் சம்பந்தம் பட்ட சிலைகள் சிற்பங்கள் என ஏராளனமை அமைந்திருக்கும். அதே போன்று முகலாயர்களும் ஆட்சி செய்ததால் முகலாய கட்டிடகலையும் கலந்திருக்கும்.
பல மன்னர்கள் மாறி மாறி கோல்கொண்டா மலையை விரிவு படுத்தினார்கள்.
ஆனால் 14ம் நூற்றாண்டில் இறுதியில் கோட்டையை கைப்பற்றிய பாமனிசுல்தான் என்பவரின் ஆட்சியில் தான் இந்த கோட்டை உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு தகுதியுடையது என கண்டுபிடித்தனர்.
இந்த கோல்கொண்டா மலை முழுவதும் கிராடைட் கற்களால் ஆனவை என கண்டுபிடித்தது மட்டுமின்றி இந்த மலையை சுற்றி ஏராளமான வைர சுரங்கள் நிறைந்துள்ளன என்பதையும் வெளி உலகிற்கு சொன்னார்கள்.
இந்த மலையை சுற்றி 60 சுரங்கங்ள் அமைத்து வைரங்களை வெட்டி எடுக்க ஆரம்பித்தனர்.
கோஹினுர் உட்பட உலகின் விலை மதிப்புள்ள வைரங்கள் எல்லாமே இங்கிருந்துதான் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.
வைரங்களும் கிரானைட் கற்களும் இந்த மலையை சுற்றி இருப்பதனால் இங்கு விலை மதிப்பும் உயர்ந்தது.
1590ல் ஐதராபாத்தை தலைநகரமாக வைத்து உலகளவில் மிகப்பெரிய வர்த்தகமும் நடந்துள்ளது. அதன்பிறகு பல அரசர்கள் போர் தொடுத்தனால் 1680களில் இந்த கோட்டையை கைவிட்டனர்.
கோல்கொண்டா கோட்டைக்குள் பல சிறப்புகள் உண்டு. அங்கு ஒரு கல் இருக்கும். அதன் எடை 240 கிலோ.
அந்த கால கட்டத்தில் கல்லினை யார் தூக்குகிறார்களோ அவர்களுக்கு தான் கோட்டையில் வேலை உண்டு என்கிற சட்டமே இருந்துள்ளதாம்.
மலை உச்சியில் உள்ள கோட்டை வாசலிலிருந்து 1 கி.மீ தூரத்தில் பாலா கிஸார் என்கிற கூண்டு உள்ளது.
அந்த இடத்திலிருந்து கை தட்டினாலோ அல்லது பேசினாலோ கோட்டை முழுவதும் எதிரொலிக்குமாம். அந்தமாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டியிருக்கின்றனர்.
கோட்டைக்குள் தர்பார் கோர்ட், ராஜாக்கள் கலந்தாலோசிக்கும் இடம் மற்றும் ரகசிய இடம், வீரர்கள் தங்குமிடம் என நிறைய இடங்கள் இருக்கின்றன.
அதிலும் தர்பாரிலிருந்து ஒரு ரகசிய வழியாக ஒரு சுரங்கபாதை போகுமாம்.
அங்கிருந்து ரகசியமாக போய் மலை அடிவாரத்தின் வழியாக தப்பித்து ஓடிவிடலாம் படியாக மலையை குடைந்து பாதை கட்டியிருக்கிறார்கள்.
முழுக்க முழக்க களிமண்ணால் கட்டியிருக்கும் கோல்கொண்டா கோட்டை பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று சின்னம் என யுனெஸ்கோ அறிவித்திருக்கிறார்கள்.
இருப்பினும் அங்கு செல்லும் சுற்றுலா நபர்கள் அங்குள்ள சுவற்றில் சித்திரம் தீட்டி அதன் அழகை கெடுக்கும் படியாக வரைந்து கிறுக்கியுள்ளனர். அதை பாதுகாக்க வேண்டியது நாம் அனைவரின் கடமை.