23.1 C
Munich
Tuesday, August 9, 2022

அதிசியம் நிறைந்த ஃபிங்கர் லைம் பற்றி உங்களுக்கு தெரியுமா..!

Must read

ஃபிங்கர் லைம் பார்ப்பதற்கு பெரிய அளவிலான பச்சை மிளகாய் போன்று இருக்கும். அதனை கட் பண்ணினால் எலுமிச்சையின் அனைத்து நற்குணங்களும் அமைந்திருக்கும். இதன் தோற்றம் ஆஸ்திரேலியா ஆகும்.

சிட்ரஸ் ஆஸ்திரேலிசியா எனப்பெயர் கொண்ட இந்த பழம் சின்ன மரம் போன்ற செடிகளில் வளர்கின்றன. இதன் இலைகள் சிறிது சிறதாக காணப்படும். அதில் பூ பூத்து காய் காய்த்து பின்பு பழமாக நமக்கு கிடைக்கும்.

இந்த பழம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். 3 இன்ச் வரை வளரக்கூடியன. இது கொஞ்சம் நேராகவும் கொஞ்சம் வளைந்தபடியும் வளர்கின்றன. இது பார்ப்பதற்கு பச்சை மட்டுமின்றி பிங்க் மற்றும் சிகப்பு ஆகிய கலர்களிலும் வளரும்.

பல வருடங்களுக்கு முன்னாடி ஆஸ்திரேலியாவில் சிட்ரஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் பல யோசனைகளுக்கு பிறகு இந்த செடியினை விதைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர். தற்போது ஆஸ்திரேலியாவில் எலுமிச்சைக்கு பதில் இந்த பழத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஃபிங்கர் லைம் பழத்தை கட் பண்ணி பார்த்தால் மாதுளம் முத்துக்களை அடுக்கி வைத்தாற் போன்று அழகாக தெரியும். சிகப்பு , மஞ்சள், பிங்க் இந்த கலரில் சுழைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதில் சிறிது உப்பு தூவி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்னாடி பெரும்பாலோனர் இதை பயன்படுத்தவில்லை. தற்போது புதுவகையான உணவுகள் அறிமுகமாகி வருவதால் தற்போது அதில் பயன்படுத்த இந்த ஃபிங்கர் லைமை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக உற்சாக பானத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஃபிங்கர் லைமின் உள்ள முத்துக்கள் பாரம்பரியமான எலுமிச்சையின் சுவை மற்றும் அதன் அளவு அப்படியே இருக்கும். மேலும் இந்த பழத்தில் புளிப்புத் தன்மை சற்று அதிகமாகவே இருக்கும்.

தற்போது ஃபிங்கர் லைமை பயன்படுத்தி நிறைய ஊறுகாய் வகைகள் செய்து வருகின்றனர். மேலை நாடுகளில் பர்கர் மற்றும் உறைந்த உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு சாப்பிட்டு வருகின்றனர். அதனால் மேலை நாடுகளுக்கு இதன் ஏற்றுமதி அதிகமாக இருக்கும்.

1990களில் இந்த பழத்தை குறைவாகத் தான் பயிரிட்டு வந்தனர். அப்போது ஊறுகாய் மற்றும் ஜாம் ஆகியவற்றிற்காக பயன்படுத்தி வந்தனர். ஆனால் பெரிதாக மக்களிடம் வரவேற்பு பெறவில்லை. ஆனால் 2000 ஆண்டுகளில் நிறைய ஃபாஸ்ட் புட் உணவகங்கள் வர ஆரம்பித்த பின்னாடி இந்த பழத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த ஃபிங்கர் லைமை பயிரிடுவதில் மிகப்பெரிய சிக்கல் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் ஃபிங்கர்லைம் சீக்கிரம் நோய் தாக்குதலுக்கு ஆளாகிவிடும். அதனால் நன்றாக பராமரித்தால் மட்டுமே நல்ல விளைச்சலை கொடுக்கும். இல்லாவிடில் முழுவதும் வீணாகிவிடும்.

எலுமிச்சை பழத்தை போன்று இதிலும் விட்டமின் சி, ஆண்டி ஆக்சைடு போன்ற அனைத்து சத்துகளும் ஃபிங்கர் லைமில் இருக்கும். ஆனாலும் இது கலப்பு வகையினத்தை சேர்ந்தது என்பதனால் சத்துக்களின் எண்ணிக்கை குறைவு தான்.

தற்போது உள்ள நிலையில் ஃபிங்கர் லைமின் சுவையின் எதிர்பார்ப்பு அதிகமாகவும் விளைச்சல் குறைவாகவும் இருப்பதனால் ஃபிங்கர் லைமின் விலை அதிகமாகவே காணப்படுகிறது. உதாரணமாக 100கிராம் ஃபிங்கர் லைம் விலை இந்திய மதிப்பில் 800 ரூபாய் ஆகும்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article