Home கட்டுரை இரவில் கொக்கரிக்கும் சுவர்கோழி பற்றிய ஆச்சரிய தகவல்கள்

இரவில் கொக்கரிக்கும் சுவர்கோழி பற்றிய ஆச்சரிய தகவல்கள்

0

சுவர்கோழியின் ஆங்கிலப் பெயர் கிரிக்கெட். இது 90 வகைகள் உள்ளன. இவை கரப்பான் பூச்சி மற்றும் வெட்டுக்கிளி இவைகளின் தூரத்து சொந்தம் எனவும் அழைக்கப்படும்.

இந்த சுவர்கோழியை வீடுகள் மற்றும் தோட்டங்களில் இரண்டு மூன்று வகைகளை காணலாம். இதன் அளவு அரிசி அளவில் காணப்படும். ஒரு சில வகைகள் மட்டும் நமது சுண்டுவிரல் அளவிற்கு வளர்ந்து காணப்படும்.

சமையல் அறையிலிருந்து தூக்கி எறியப்படும் அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்களின் வாசனைக்கு இந்த பூச்சிகள் வரும். இதற்கு அழுகிய ஆப்பிள் என்றால் மிகவும் பிடிக்கும்.

இதன் வாசனை வீட்டிற்கு இருப்பது தெரியவந்து உள்ளே நுழைந்துவிட்டால் இதனை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

சுவர் கோழி இனத்திலேயே மிகவும் சத்தத்தை வெளிப்படுத்தி நம்மை கோபத்திற்கு ஆளாக்கும் இனம் காட்டுருவி என்ற இனம் தான்.

பார்ப்பதற்கு சுண்டுவிரல் அளவில் கருப்பாக காணப்படும். இது பெரும்பாலும் காடுகள் மற்றும் வயல்வெளிகளில் அதிகமாக காணப்படும்.

இந்த பூச்சி இனம் பெரிதாக பறக்காது. தத்தி தத்தி தான் செல்லும். அதுமட்டுமின்றி இது பகல் நேரத்தில் வெளியே வரவே வராது. இரவு நேரத்தில் வெளியே வந்து சத்தமிட்டு நமது தூக்கத்தை கெடுக்கும்.

இந்த பூச்சிகள் தனியாக கத்தாது. இரவு நேரத்தில் ஆண் பூச்சிகள் எல்லாம் பெண் பூச்சிகளை கவர்வதற்காக கூட்டமாக சேர்ந்து கத்தும். அந்த சத்தத்தை கேட்டு பெண் பூச்சிகள் அங்கு ஒன்று சேர ஆரம்பித்துவிடும்.

இதில் சோகமாக நிகழ்வு என்னவென்றால் ஆண் பூச்சிகள் எல்லாம் பெண் பூச்சிகளுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்தவுடன் ஆண்பூச்சிகள் இறந்துவிடும். பெண்பூச்சிகளுக்கு அதிக சக்தி கிடைத்துவிடும்.

இந்த பூச்சிகள் 10 நாட்கள் வளர்ந்துவிட்டாலே இனப்பெருக்கத்திற்கு தயராகிவிடும். இனப்பெருக்கம் முடிந்தவுடன் பெண்பூச்சிகள் 2 நாட்களில் 50 முதல் 100 முட்டைகள் வரை இடும்.

முட்டை போட்டவுடன் முட்டை வடிவத்திலிருந்து புழுவாகி அதன்பிறகு பெரிய பூச்சியாக வளர்ந்து அதன் ஆயுட்காலம் வெறும் இரண்டு மாதங்கள் மட்டுமே.

இந்த இடைப்பட்ட நாட்களில் பல்லி போன்ற உயிரினங்களிலிருந்து தப்பிப்பவை தான் பெரிய பூச்சிகளாக வளர்ந்து வரும்.

சுவர்க்கோழிகளுக்கு அதிக அளவு கண்பார்வை, மோப்ப சக்தி, கேட்கும் திறன் அதிகளவில் காணப்படும். அதன்மூலம் தூரத்தில் யார் வருகிறார்கள் எதற்காக இங்கு வருகிறார்கள் என்பதை கணித்து பறந்துவிடும்.

சுவர்க்கோழிகள் தாவரங்களின் கழிவுகளையும் சின்னச் சின்ன உயிரினங்களின் கழிவுகளையும் சாப்பிடும். சில நேரத்தில் அதனோட இனத்தின் சிறு பூச்சிகளையே சுவர்கோழிகள் உண்டுவிடும்.

சுவர்க்கோழிகளுக்கு மிகப்பெரிய எதிரி யாரென்றால் நாப்தலீன் பந்துகள் தான். இந்த பந்துகளை வீடுகளில் அங்காங்கே போட்டு வைத்திருந்தால் இந்த வாசனைக்கு இந்த பூச்சிகள் வரவே வராது.

Exit mobile version