IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ் டவர்ஸ் ரூ 35 கோடி நன்கொடை

Get real time updates directly on you device, subscribe now.

உலகை ஆட்டிப் படைக்கும் கொள்ளை நோயான கோவிட்-19க்கு எதிரான போரில் நாட்டுக்கு ஆதரவளிக்கும் உறுதிமிக்க கூட்டாளி என்னும் வகையில் இண்டஸ் டவர்ஸ் நிறுவனம் ரூ 35 கோடிகளை பிஎம் – கேர்ஸ் நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கி உள்ளது. கூடுதலாக இண்டஸ் டவர்ஸ் குழுக்கள் அத்தியாவசியச் சேவைகளை தங்கு தடையின்றி நடைபெறுவதில் இந்தியாவையும், சமூகத்தையும் கைபேசி கோபுரங்கள் மூலம் இணைப்பதில் முக்கியப் பங்களிக்கின்றன.

சமூக விலகலை நாடு கடைப்பிடிப்பதுடன், குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் இணைந்திருக்கக், களப்பணியாளர்களின் இந்த முனைவுகளே காரணமாகும். முக்கியமாக வீட்டிலிருந்தே பணியாற்றும் வாய்ப்பை நிறுவனங்கள் வழங்கவும், ஒவ்வொரு நிறுவனத்தின் வணிகத் திட்டமிடலும் தொடர்ந்து நடைபெறவும் இணைப்பின் பங்களிப்பு முக்கிய அம்சமாக விளங்குகிறது.

இண்டஸ் டவர்ஸ் களப் பணியாளர்கள் தேவையான பாதுகாப்பு கருவிகளுடன் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு நோய்த் தொற்று தீவிரமாக உள்ள ஹாட்ஸ்பாட் பிராந்தியங்களிலும் இருபத்திநான்கு மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தடையில்லா இணைப்புக்கு முக்கிய அடிப்படையான கைபேசி கோபுரங்கள் தொடர்ந்து இயங்குவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

முகமூடிகள், சானிடைசர்கள், கையுறைகள், முழு உடலுக்கான சூட், சானிடைசேஷன் கிட்ஸ் உள்ளிட்ட தனிநபர் பாதுகாப்புக் கருவிகளை (பிபிஇ) கோவிட்-19 கொள்ளை நோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், காவல் துறை, தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்க இண்டஸ் டவர்ஸ் ஊழியர்கள் கணிசமான தொகையைத் திரட்டி நன்கொடை அளித்துள்ளனர், என்று இண்டஸ் டவர்ஸ் சிஇஓ பிமல் தயாள் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader