IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

உங்கள் மனைவியை போன்றது கொரோனா! சர்ச்சை ஏற்படுத்திய அமைச்சர்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா வைரஸ், உங்கள் மனைவியை போன்றது. அதனை ஆரம்பத்தில் நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கலாம், பின்னர் அது முடியாது என்பதை கற்றுக் கொள்வீர்கள் என்று கூறிய இந்தோனேசிய அமைச்சருக்கு மகளிர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கடும்பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், உலகில் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனேசியாவில் இதுவரை கொரோனாவுக்கு 1,496 பேர் இறந்துள்ளனர். சுமார் 24,000 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனை விகிதங்கள் குறைவாக இருப்பதால் முழுமையான பாதிப்பு தெரியவில்லை.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் அடுத்தவாரம், மீண்டும் வணிகங்களை திறக்க இந்தோனேசியா அரசு திட்டமிட்டுள்ளது. அப்போது சமூக விலகல் மீறல்களைக் கட்டுப்படுத்த சுமார் 340,000 துருப்புக்களை களமிறக்கியுள்ளது.

இந்நிலையில் இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் முகமது மஹ்புத், உள்ளூர் பல்கலைக்கழகம் ஒன்றிற்காக ஆன்லைன் மூலம் உரையாற்றினார். அதில், “நாம் எப்போதும் ஒளிந்துகொண்டிருக்க முடியுமா? நம் உடல்நலத்தில் கவனம் செலுத்தினால் நிலைமையை சரிசெய்யலாம். எனது நண்பர் ஒரு மீம் அனுப்பியிருந்தார். கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது. ஆரம்பத்தில் நீங்கள் கட்டுப்படுத்த நினைப்பீர்கள், ஆனால் உங்களால் முடியாது. பின்னர் நீங்கள் அதனுடன் வாழ கற்றுக்கொள்வீர்கள்.” என்று நகைச்சுவையாக பேசினார்.

வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் அரசு பலவீனமாக உள்ளது. அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஆணாதிக்க மற்றும் தவறான மனநிலையுடன் இருப்பதையே இது காட்டுகிறது என்று அமைச்சரின் கருத்துக்கு பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader