IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்திய பங்குச்சந்தைகளின் புள்ளிகள் உயர்வுடன் தொடக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

இந்திய பங்குச் சந்தைகள் நேற்று சரிவுடன் முடிவடைந்துள்ள நிலையில் இன்று வாரத்தின் கடைசி நாளில் உயர்வுடன் தொடங்கின.

இன்றைய வர்த்தகநேர காலை துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 206.45 புள்ளிகள் உயர்ந்து 38,516.94ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 56.10 புள்ளிகள் உயர்ந்து 11,356.55ஆகவும் வர்த்தகமாகின.

ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்ற – இறக்கமான சூழல் இருந்தபோதிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், எல்அண்ட்டி., சன்பார்மா உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பங்குகள் அதிக ஏற்றத்துடன் காணப்பட்டதாலும் வெளிநாட்டு நிதி வரத்து அதிகரிப்பாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் காணப்படுகின்றன.

தொடர்ந்து காலை 11.00மணியளவில் சென்செக்ஸ் 110 புள்ளிகளும், நிப்டி 28 புள்ளிகள் உயர்ந்தும் வர்த்தகமாகின. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.74.80ஆக வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.20 சதவீதம் உயர்ந்து 45.05 அமெரிக்க டாலருக்கு விற்பனையானது.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader