IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கைலாசாவிற்கான விசா பெறுவது எப்படி ? நித்தியை கலாய்க்கும் அஸ்வின்

199


இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் நித்தியானந்தா வாங்கியுள்ள புதிய தீவான கைலாசாவிற்கு எப்படி செல்வது என்பது குறித்து டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நித்தியானந்தா பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் தொடர்ந்த பிரச்சனையை முன்னிட்டு தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் அதற்கு கைலாசா எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த தீவிற்கு தனிகொடி, தனி நாடு தனி பாஸ்போர்ட் என இந்துக்களுக்கான ஒரு நாடாக நித்தியானந்தா அதனை உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அந்நாட்டிற்கு எப்படி விசா வாங்குவது என அஸ்வின் கேட்டுள்ள டுவிட் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கைலாசாவிற்கு விசா பெறுவதற்கான நடைமுறை என்ன ? என அஸ்வினின் டுவிட்டிற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.