IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட 89 செயலிகள் தடை செய்ய இந்திய ராணுவம் உத்தரவு

Get real time updates directly on you device, subscribe now.

ராணுவ வீரர்கள் அனைவரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஜும் உட்பட 89 மொபைல் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் முக்கியமான தரவுகள் கசிவதை தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு வருகின்ற 15ம் தேதி முதல் அமலுக்கு வரும். இந்த ஒழுங்கு முறையை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீன உளவு அமைப்புகளால் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள், சமூக வலைதளங்களில் அதிகளவில் கண்காணிக்கப்படுவதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தடை உத்தரவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், பைடு, ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக ஊடக செயலிகள், டேட்டிங் செயலி டின்டர், கேம் செயலி பப்ஜி, கிளாஷ் ஆஃப் கிங்ஸ், வி சாட், ஹைக், நிம்பஸ், ஐஎம்ஓ உள்ளிட்ட பிரபலமான வீடியோ கால் செயலிகளும் வீட்டிலிருந்து பணி புரிபவர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஜூம் செயலியும் இந்த தடை செய்யப்பட்ட செயலிகளில் அடங்கும்.

தேசிய பாதுகாப்பு கருதி ஏற்கனவே 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னதாக கடந்த ஆண்டு நவம்ப் மாதம் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளை ராணுவ அதிகாரிகள் பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader