IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தொடரை இழந்தது இந்தியா.!!!

12

இந்தியாவுக்கு எதிரான 3வது ரி20 கிரிக்கெட் போட்டியில் நீயூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

 

மூன்றாவதும் இறுதியுமான ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணிக்கு, 213 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

 

தொடரைத் தீர்மானிக்கும் இறுதி போட்டி இன்று ஹெமில்டனில் ஆரம்பமானது.

 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.

 

அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 

நியூசிலாந்து அணி சார்பில் கோலின் முன்ரோ 72 ஓட்டங்களையும், டிம் சீஃபெர்ட் 43 ஓட்டங்களையும், கொலின் டி கிராண்ட்ஹோம் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

 

பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

இதனை தொடர்ந்து 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி போராடி 4 ஓட்டங்கள் வித்தயாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

 

இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை பெற்றது.

 

இதில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 43 ஓட்டங்களை பெற்று கொண்டார்.

 

இரு அணிகளுக்கும் இடையிலான ரி20 தொடரினை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணககில் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.