IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மீண்டும் நிலவை ஆராய சந்திராயன் 3 விண்கலம்

123

நிலவின் தென்துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 21 கி.மீ தொலைவில் இருந்த போது தொடர்பு துண்டிக்கப்பட்டது.

வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோவுடன் நாசாவும் கைகோர்த்து பல்வேறு வழிகளில் முயற்சித்தும் பலனில்லை.

இந்நிலையில் 2020-ம் ஆண்டு இறுதியில் சந்திராயன் – 3 விண்ணில் செலுத்த திட்டம் செயல்படுத்துவதாக இஸ்ரோ அறிவிக்கப்பட்டுள்ளது. லேண்டரை சாப்ட் லேண்டிங் செய்ய விக்ரம் லேண்டரின் கால்கள் வலுவானதாகவும், எந்த கடினமான சூழ்நிலையிலும் நிலவில் தரையிறக்கவும் சந்திராயன் 3-ல் ஏதெனும் குறைகளை இருந்தால் அவற்றை சரிசெய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சந்திராயன்-3 மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.