IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவில் முதன்மையான தொழில் மட்டுமல்ல, அதிக பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் தொழில் விவசாயம். நம் நாட்டு விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் செய்யப்பட்ட விவசாய முறைகள் தெரியும். அதுதான் இந்தியாவின் பலம். விவசாயிகளின் பலம்.

நாளடைவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் விவசாயிகள். அதனால் விளைச்சல் அதிகமானாலும் செலவும் அதிகரித்தது. தற்போது மீண்டும் இயற்கை விவசாயம் நோக்கி திரும்புகின்றனர் விவசாயிகள்.

இந்நிலையில் மத்திய விவசாயத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இயற்கை விவசாயிகள் உள்ள நாடு இந்தியா என்று குறிப்பிட்டுள்ளது.

அதில்,’இயற்கை விவசாயிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தையும், இயற்கை விவசாயப்பரப்பில் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளது.

உலகத்திலேயே முற்றிலும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் முதல் மாநிலமாக சிக்கிம் திகழ்கிறது. திரிபுரா, உத்தரகாண்ட் மாநிலங்களும் இதே போன்ற இலக்குகளை அடைந்துள்ளன.

இந்தியாவின் வடகிழக்கு பகுதி பாரம்பரியமாக இயற்கை விவசாயத்தை கொண்டதாகும். அங்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், நாட்டின் மற்ற பகுதிப் பயன்பாட்டை விட மிகவும் குறைவாகும். இதேபோல, மலைவாழ் பழங்குடியினர் பகுதிகள் மற்றும் தீவுகளில் இயற்கை விவசாயம் செழித்துள்ளது.

விவசாயிகள், ரசாயனப் பயன்பாடு இல்லாத, இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு, தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், வடகிழக்குப் பிராந்தியத்துக்கான இயற்கை மதிப்புச் சங்கிலி மேம்பாட்டு இயக்கம், பாராம்பரகட் கிருசி விகாஸ் யோஜனா ஆகிய இரண்டு திட்டங்கள் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன’ எனக்கூறியுள்ளது.

இயற்கை மதிப்புச் சங்கிலி மேம்பாட்டு இயக்கம், பாராம்பரகட் கிருசி விகாஸ் யோஜனா ஆகிய இந்த திட்டங்களே இந்தியா இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கையில் முதலிடம் பெற காரணம் என்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader