IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இனி வெளியூர் பயணங்களுக்கு கூகுள் மேப் தேவையில்லை – இஸ்ரோவின் IRNSS போதுமே!

Get real time updates directly on you device, subscribe now.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல நாம் இதுவரை கூகுள் மேப் என சொல்லப்படும் GPS யை தான் பயன்படுத்தி வந்தோம். GPS என்பது அமெரிக்காவிற்கு சொந்தமான ஒரு நேவிகேஷன் சிஸ்டம். ஆனால் இனியும் அதனை பயன்படுத்த வேண்டிய அவசியம் நமக்கில்லை.

ஏனெனில் நமது இந்தியாவிற்கென்று சொந்தமான ஒரு நேவிகேஷன் சிஸ்டமை நமது ISRO நிறுவனம் உருவாக்கி உள்ளது. அதன் பெயர் தான் ‘நேவிக்’ (NavIC). இது இந்தியர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கக் கூடிய ஒரு விஷயம். GPS சரியாகத்தான் இருந்த போது ஏன் தீடீரென NavIC க்கு மாற வேண்டும் என்று உங்கள் அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி எழும்.

அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நடந்தது நம் அனைவருக்கும் தெரியும். அந்த போரின் போது இந்தியா அமெரிக்காவிடம் போர் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள GPS சிக்னலின் தகவல்களை கேட்டது. ஆனால் அமெரிக்கா அதனை தர மறுத்து விட்டது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அந்த நேரத்தில் இந்தியா எடுத்த முடிவு தான் “நமது நாட்டிற்கென தனியாக ஒரு நேவிகேஷன் சிஸ்டம் தயாரிக்க வேண்டும்” என்பது.

அதன் விளைவாகவே நமக்கு தற்போது NavIC கிடைத்துள்ளது. NavIC என்பது நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன் (Navigation with Indian Constellation). இது தற்போது பல ஸ்மார்ட் போன்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டும் உள்ளது.

ஒட்டுமொத்த உலகையும் கவர் செய்யும் விதமாக மூன்று நேவிகேஷன் சிஸ்டம் உள்ளது. அவை GPS, க்ளோனஸ் (Glonass) மற்றும் கலிலியோ (Galileo) ஆகும். இந்தியா தற்போது வெளியிட்டுள்ள நேவிகேஷன் சிஸ்டம் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே நேவிகேட் செய்ய உதவும். அதாவது இந்தியா மற்றும் அதனை சுற்றி 1500 கிலோ மீட்டர் தூரம் வரை தற்போது கவர் செய்கிறது. எதிர்காலத்தில் இதனை உலக அளவிலும் கொண்டு வரலாம்.

NavIC ன் முதல் பெயர் IRNSS -இந்தியன் ரீஜினல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் (Indian Regional Navigation Satellite System). இந்த நேவிகேஷன் சிஸ்டமை செயல்படுத்துவதற்காக 2013 ஆம் ஆண்டு முதன் முதலில் விண்ணில் செயற்கை கோள் செலுத்தப்பட்டது. இதனை அடுத்து இதுவரை ஏழு செயற்கை கோள்கள் விண்ணில் உள்ளன. அவற்றின் உதவிகள் மூலமாகவே தற்போது NavIC வேலை செய்கிறது.

உலகம் முழுவதும் நேவிகேட் செய்ய GPS க்கு 32 செயற்கை கோள்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் NavIC கானது GPS யை காட்டிலும் வேகமாகவும் துல்லியமாகவும் செயல்படும். உதாரணமாக GPS 10 மீட்டர் தூரம் வரை மட்டுமே துல்லியமான தகவலை அளிக்க முடியும். ஆனால் NavIC கின் உதவியுடன் 20 மீட்டர் தூரத்தில் கூட சரியான தகவலை நம்மால் பெற முடியும்.

இந்த NavIC இந்திய இராணுவம், எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள், ஆளில்லா இரயில்வே க்ராஸிங் போன்றவற்றிற்கு பயன்படும் ஒரு அருமையான தொழில்நுட்பம்.

நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் NavIC வசதி இல்லை. போனின் ஹார்டுவேரில் இதனை பெறுவதற்கான ரிசீவர் இருந்தால் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும். இனி வரக்கூடிய ஸ்மார்ட் போன்களில் நிச்சயம் இந்த வசதி இருக்கும்.

NavIC யை முழுமையாக அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் இனி நாம் தகவலுக்காக பிறரை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது. அது மட்டுமல்ல நம் தகவல் நம்மை தவிர வேறு யாரிடமும் இருக்காது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More