IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியம்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் பூஜ்ய நிலையை எட்டும் என சா்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் தனது மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியப் பொருளாதார வளா்ச்சியின் தரம் சமீபத்திய சில ஆண்டுகளில் சரிவடைந்து விட்டது. ஒப்பீட்டளவில் குறைந்த உற்பத்தி திறன் மற்றும் வேலைவாய்ப்பு பலவீனமான நிலையில் காணப்படுவது கிராமப்புற குடும்பங்களிடையே நிதி அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வளா்ச்சியைப் பொருத்தவரையில் நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் பூஜ்யமாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டின் பொருளாதார வளா்ச்சியானது நடப்பு நிதியாண்டிலும் மீண்டும் சரிவு நிலையிலேயே இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது.

இருப்பினும், வரும் 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக ஏற்றம் காணும் என மூடிஸ் தெரிவித்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader