IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்தியா மீது தாக்குதல் நடத்த லடாக் எல்லையில் முகாமிட்டுள்ள சீனப்படைகள்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியா மீது தாக்குதல் நடத்த லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படைகள் முகாமிட்டுள்ள புகைப்படங்களும் அதன் வீடியோவும் வெளியாகி உள்ளன.

நேற்று முன் தினம் இரவு சீனப் படைகள் இந்திய ராணுவத்தினரைத் தாக்கியதில் சுமார் 20 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீன வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் உலவி வருகின்றன.

டிவிட்டரில் டானிஷ் சித்திக்கி வெளியிட்டுள்ள பதிவில், ராணுவ வாகனங்கள் கல்வான் பள்ளத்தாக்கு, (லடாக் இந்தியாவில்) செல்லும் விண்கலம் எடுத்த புகைப்படங்கள் பதியப்பட்டுள்ளன. ஜூன் 16 அன்று இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவை ராய்ட்டர் செய்தி தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader