IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இந்தியா வெளிநாடுகளில் திரட்டிய கடன் 2,517 கோடி டாலர்

98


இந்திய நிறுவனங்கள் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் வெளிநாடுகளில் 2,517 கோடி டாலர் வணிக கடன் திரட்டி உள்ளன.


பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தமது விரிவாக்க நடவடிக்கைக்கு தேவையான நிதியை பல் வேறு வழிமுறைகளில் திரட்டுகின்றன. இதில் வெளிநாடுகளில் பங்குகள், கடன் பத்திரங்கள் விற்பனை மூலம் நிதி திரட்டுவதும் முக்கிய வழி முறையாக இருகின்ரன. இவ்வாறு திரட்டும் நிதியை நிறுவனங்கள் தமது வளர்ச்சித் திட்டங்கள், நடைமுறை மூலதன தேவை, பழைய கடன்களை திரும்ப செலுத்துவது மற்றும் சில பொது நோக்கங்களுக்காக பயன் படுத்துகின்றன.


பாரத ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெற்றும், அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையிலும் இருக்கின்றது. கடந்த ஆண்டின் இதே காலத்தை விட இது 53 சதவீதம் அதிகமாகும். அப்போது திரட்டிய கடன் 1,648 கோடி டாலராக இருந்தது. கடந்த 2018 – 2019 ஆம் நிதி ஆண்டில் நமது நிறுவனங்கள் மொத்தம் 4,200 கோடி டாலரை வெளிநாட்டு வணிகக் கடனாக திரட்டி உள்ளன. முந்தைய ஆண்டில் அது 2,600 கோடி டாலராக இருந்தது. ஆக திரட்டிய கடன் 62 சதவீதம் உயர்ந்துள்ளது.


இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் கடன் திரட்டுவது போல் முதலீடும் செய்து வருகின்றன. அதாவது பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் வங்கி உத்தரவாதங்கள் வாயிலாக வெளிநாடுகளில் முதலீடு செய்யப்படுகிறது. வெளிநாட்டு கூட்டுத்திட்டங்கள் மற்றும் துணை நிறுவனங்களில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுகிறது.


#India #2,517Crores #Dollar #debt #foreign