IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து – போராடி வெளியேறியது இந்தியா

1


நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல், இந்திய அணி 49.3வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களில் சுருண்டது. இதன் மூலம், 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது.


உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூலை.10) மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின.


நேற்று மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்து, மீண்டும் அதே இடத்தில் இருந்து இன்றைய ஆட்டத்தைத் தொடங்கியது.


இந்தியாவுக்கு கடைசி மூன்று ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் நான்கு பந்தில் ஐந்து ரன்களே எடுத்தனர்.


ஐந்தாவது பந்தை ஜடேஜா தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 59 பந்தில் 77 ரன்கள் சேர்த்தார்.


49-வது ஓவரை பெர்குசன் வீசினார். முதல் பந்தை டோனி சிக்சருக்கு தூக்கினார். ஆனால் துரதிருஷ்டவசமாக 3-வது பந்தில் ரன்அவுட் ஆனார். அத்துடன் இந்தியாவின் தோல்வி உறுதியானது. டோனி 72 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் புவனேஷ்வர் குமார் போல்டானார்.


கடைசி ஓவரில் சாஹல் ஆட்டமிழக்க இந்தியா 49.3 ஓவரில் 221 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.