IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பால் பொருட்கள் இறக்குமதியை அரசு அனுமதிக்க கூடாது – PDP தலைவர்

Get real time updates directly on you device, subscribe now.

மத்திய அரசு பால் பவுடர் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவருவது தாய்மார்கள் மனதில் கவலையளிக்கிறது என PDP தலைவர் பாஸ்கரன் தெரிவித்தார்.

பால் மற்றும் பாலில் இருந்து பெறப்படும் மற்ற பொருட்களுக்கு இந்தியச் சந்தையைத் திறக்க அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. இந்த குறுகிய கால வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டால் அது இந்தியாவின் பால் உற்பத்தியாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி ஆகியவற்றில் உலக அளவில் இந்தியா முன்னணி நாடு, மேலும் நமது விவசாயிகளின் வாழ்வாதாரம் நிலம் என்றால் உயிராதாரம் கால்நடை வளர்ப்பாகும். இந்த நிலையில்தான் நமது நாட்டு மாட்டு இனங்களை காப்பாற்றியாக வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் உள்ளது. ஏனெனில் நாட்டு மாடுகளின் பால்தான் நமது எதிர்கால சந்ததியினரை நோயின்றி வாழவைக்கும் வல்லமை கொண்டதாகும்.

நாட்டு மாட்டு இனம் அழிவுக்கு நமது அரசுகள் பாதை அமைப்பது மிகவும் ஆபத்தானது என்பதை உணரவேண்டும். நமது பாரதத் திருநாட்டிலுள்ள குழந்தைகள் மற்றும் மகளிர் நலனில் அரசின் அக்கறை அதிகரிக்க வேண்டுமேயன்றி கடுகளவும் குறையக்கூடாது. பால் பவுடர் மற்றும் அதுதொடர்பான பொருட்களை உற்பத்தி செய்வதை மத்திய, மாநில அரசுகளே ஏற்கவேண்டும். இதில் இங்குள்ள தனியாருக்கும் கட்டுப்பாடுகள் அதிகம் வேண்டும்.

இதில் அந்நிய நாடுகளிடமிருந்து இறக்குமதியை அனுமதிக்கும் முடிவை கைவிட்டு கோடிக்கணக்கான தாய்மார்களின் வயிற்றில் பால்வார்க்க வேண்டும் நமது மத்திய அரசு என்று புதுச்சேரி வளர்ச்சிக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்வதாக PDP தலைவர் பாஸ்கரன் தெரிவித்தார்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader