12.1 C
Munich
Monday, October 3, 2022

விலை மதிப்பு மிக்க சந்தனமரம் பற்றிய அறிய தகவல்கள்

Must read

சந்தன மரத்தின் தாய் வீடு என்பது தென் இந்தியா தான். அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மற்றும் மைசூர் போன்ற மாநிலங்களில் சந்தன மரங்கள் அதிகமாகவே பயிரிட்டனர்.

தற்போது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லையில் உள்ள ஊர்களில் சந்தன மரங்கள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகின்றன.

சந்தன மரங்கள் கடல் பரப்பளவில் 1000 மீ முதல் 4000 மீ வரை உயரம் உள்ள நிலப்பரப்பில் நன்றாக வளர்க்கலாம்.

அதுமட்டுமின்றி 19 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியல் வெப்பம் உள்ள ஊர்களில் மிகவும் செழிப்பாக வளர்க்கலாம்.

சந்தன மரங்கள் சாண்ட்லும் எனும் குடும்பத்தை சேர்ந்தவை. இது எடை உயர்ந்ததாகவும் மிகவும் வாசனை தன்மை உடையதாகவும் காணப்படும்.

எத்தனை வருடங்கள் ஆனாலும் மற்ற மரங்களைப் போன்று இல்லாமல் வாசனைத்தன்மையே அப்படியே கொண்டிருக்கும்.

உருமாறிய பாறையிலிருந்து வந்த மண் மற்றும் செம்மண் உள்ள இடங்களில் சந்தன மரங்கள் செழிப்பாக வளரும். குறிப்பாக ஈரப்பதம் உள்ள மண்களில் மிகவும் அடர்த்தியாக செழிப்புடன் வளரும்.

சந்தன மரங்கள் பயிர் செய்தவுடன் உடனே வளர்ந்துவிடாது. குறிப்பாக 1 முதல் 3 மாதங்கள் வரை எந்தவிதமான ரியாக்சனும் காட்டாது. அதற்கு பிறகு 1 வருடம் வரை வெறும் 25 சதவீதம் மட்டுமே வளர்ந்திருக்கும்.

சந்தன மரங்கள் மற்ற மரங்களைப் போன்று நட்டவுடன் வளர்ந்துவிடாது. பிறந்த குழந்தையை போன்று பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகம் ஈரப்பதம் இருக்க வேண்டும்.

அதே நேரம் வெயில் கொஞ்சம் படும் படியாகவும் அதிக வெயில் படக்கூடாது. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வேண்டும். இந்தமாதிரி பார்த்துக்கொண்டால் செழிப்பாக வளரும்.

எல்லா சந்தன மரத்திற்கும் விலை மதிப்பு அதிகமாக காணப்படாது. அது எப்படி கணக்கிடுகிறார்கள் என்றால் மரத்திலிருந்து எடுக்கப்படும் வாசனை ஆயில் மூலமாகத்தான் மதிப்பிடப்படுவார்கள்.

எல்லா மரத்திலும் அதிக ஆயில் கிடைத்துவிடாது. நன்றாக உரம் ஏறிய மரங்களில் மட்டும் தான் அதிகமான ஆயில் தன்மை கொண்டிருக்கும்.

உலகளிவில் அதிகமான விலை மதிப்பில் மதிப்பிடப்படும் முதன்மை மரம் ஆப்பிள் பிளாக் வுட். அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது சந்தன மரம்.

இதற்கு காரணம் இதிலிருந்து எடுக்கப்படும் வாசனை திரவியங்கள் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக எடுக்கப்படும் உபகரணங்களும் தான்.

பல ஆயிரம் நூற்றாண்டுகள் சந்தன மரங்கள் இருந்தாலும் சில நூற்றாண்டு களாகத்தான் சந்தன மரத்தின் முழு பயன்பாட்டையும் பயன்படுத்தி வருகிறோம்.

அதற்கு காரணம் சந்தன மரத்தின் மருத்துவ பயன்பாட்டை ஆராய்ச்சி செய்து பார்த்த பிறகுதான் அதனை நாம் முழுமையாக பயன்படுத்த தொடங்கியுள்ளோம்.

ஒரு சந்தன மரத்திலிருந்து முழுமையாக வாசனை திரவியம் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கு தேவையான பொருட்களை எடுப்பதற்கு தேவையான பருவம் என்பது 15 வருடங்கள் ஆகும். வயது கூட கூடத்தான் மதிப்பு அதிகமாகும்.

தமிழ்நாட்டில் சந்தன மரங்கள் வீட்டில் வளர்க்க கூடாது என்ற கட்டுப்பாட்டை 2002ம் நாட்டில் நீக்கிவிட்டார்கள். அதாவது அரசாங்கம் சொல்லும் கட்டுப்பாட்டின் கீழ் சந்தன மரங்களை தனியார் இடங்களில் வளர்க்கலாம்.

சந்தன மரங்கள் வளர்ப்பவர்களுக்கு முடிச்சு நோய் என்ற பிரச்சனை பெரிய தலைவலியாக இருக்கும். அதனால் தான் சந்தன மரங்கள் வளர்க்கும் இடங்களில் நடுவிலேயே வேப்பம் மரம், புங்கை மரம் மற்றும் எட்டி மரம் போன்ற மரங்களை வளர்த்து சந்தன மரங்களை பாதுகாப்பார்கள்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article