IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

BOOKMARK செய்த இணையதளங்களை IMPORT மற்றும் EXPORT செய்வது எப்படி?

Get real time updates directly on you device, subscribe now.

சில முக்கியமான இணையத்தளங்களை அல்லது நாம் அடிக்கடி பயன்படுத்தும் இணையத்தளங்களை மீண்டும் பயன்படுத்துவதற்காக Bookmark செய்து செய்து கொள்வது வழக்கமாகும். இதற்கான வசதி அனைத்து வகையான இணைய பிரவுசர்களிலும் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த Bookmark செய்யப்பட்ட இணையத்தளங்களை வேறொரு கணினியில் உள்ள பிரவுசருக்கு கொண்டு செல்லும் வசதியும் காணப்படுகின்றது. இதற்கு முதலில் அனைத்து Bookmark செய்யப்பட்ட இணையத்தளங்களையும் Export செய்ய வேண்டும்.

பின்னர் மற்றைய கணினியில் உள்ள பிரவுசரில் அவற்றினை Import செய்ய வேண்டும். குரோம் பிரவுசரில் இதற்கான படிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

பிரவுசரின் மெனு பட்டனை கிளிக் செய்து தோன்றும் மெனுவில் Bookmarks சென்று Bookmark Manager என்பதை கிளிக் செய்யவும். அதன் பின்னர் Bookmark Manager மெனுவில் Export Bookmarks என்பதை கிளிக் செய்யவும். இன்போது Bookmarks அனைத்தும் HTML கோப்பாக சேமிக்கப்படும்.

அதன் பின்னர் வேறொரு பிரவுசரில் Import செய்வதற்கு மெனுவில் Bookmarks சென்று Bookmark Manager ஐ தெரிவு செய்யவும். தொடர்ந்து Bookmark Manager மெனுவை கிளிக் செய்து Import Bookmarks என்பதை கிளிக் செய்து சேமிக்கப்பட்டுள்ள Bookmarks கோப்பினை திறக்கவும்.

இப்போது அனைத்து Bookmarks இணையத்தளங்களும் புதிய இணைய பிரவுசருக்கு மாற்றப்பட்டிருக்கும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader