IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஐஐடி மெட்ராஸின் உலகின் முதல் இணையவழி புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் விண்ணப்பங்கள் வரவேற்பு

Get real time updates directly on you device, subscribe now.

ஐஐடி மெட்ராஸ் உலகின் முதல் இணையவழி புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸில் B.Sc பட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

NIRF இந்திய தரவரிசைப் பட்டியலில் No.1 இடம் பெற்ற இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ஐஐடி மெட்ராஸ், புதிதாக வழங்க உள்ள உலகின் முதல் இணையவழி B.Sc புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் பாடத்திற்கான விண்ணப்பச் செயல்முறையை துவங்கியுள்ளது.

தகுதி சரிபார்ப்புச் செயல்முறையில் மாணவர்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களைப் பதிவேற்றி, ரூ. 3000 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்திப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த கட்டணம் தேர்வுக்கான நான்கு வார இணைய வழிப் பாடப்பயிற்சிக்கும் மற்றும் தேர்வுக்கான கட்டணமும் ஆகும். மாணவர்கள் https://www.onlinedegree.iitm.ac.in முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகபட்சமான 2,50,000 அடைந்தவுடன் அல்லது செப்டம்பர் 15ஆம் தேதிக்கு மேல் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

இந்தப் பயிற்சியில் சேர பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சியும் பத்தாம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதமும் பயின்றிருக்க வேண்டும். 2020ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகள் மற்றும் பணியாற்றுபவர்கள் கூட இதில் விண்ணப்பிக்கலாம்.

ஏனெனில் வயது, பாடப்பிரிவு மற்றும் இருப்பிடம் ஆகிய தடைகளை விலக்கி உலகத்தரம் வாய்ந்த புரோகிராமிங் மற்றும் டேட்டா சயன்ஸ் பாடத்திட்டம் நாடெங்கிலும் உள்ள அனைத்து ஆர்வலர்களுக்கும் கிடைக்கச் செய்வதே IITM ன் நோக்கமாகும். தகுதிக்கான அதிக விவரங்களை இணையதளத்தில் பெறலாம்.

இந்தப் பயிற்சி பற்றி IITM-ன் இணையவழி பட்டப்படிப்பிற்கு பொறுப்பு பேராசிரியராக உள்ள பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் குறிப்பிடுகையில், இதை அறிமுகப்படுத்திய நாள் முதல் சேர விரும்பும் மாணவர்களிடமிருந்து பெரும் ஆர்வத்தை காண முடிகிறது. இந்தப் பயிற்சி, புதிய கல்விப்போக்கான இணைய வழிக் கல்வியை தழுவுதல் மட்டுமன்றி புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் பிரிவில், திறனுள்ள, பணியமர்த்த கூடிய பட்டதாரிகளுக்கான தளமாகவும் இருக்கும்.

விண்ணப்பச் செயல்முறையாக, அனைத்து விண்ணப்பதாரர்களும், நான்கு அடிப்படை நிலைகளுக்கான நான்கு வாரக் காணொளி பயிற்சிக்கான அனுமதியை பெறுவர். காணொளிப் பாடங்களுடன் முதல் 3 வாரங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஆன Assignment-களை இணையவழியாக, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து Assignment-களிலும் குறைந்த பட்ச சராசரி மதிப்பெண்களை பெறும் தகுதி வாய்ந்த மாணவர்கள் மட்டுமே நேர்முக கண்காணிப்புடன் கூடிய தகுதி தேர்வில் பங்கேற்கலாம்.

Genuine Indian Payment Gateway

ஐஐடி மெட்ராஸ்-ன் இணையவழி பட்டப்படிப்பிற்கு மற்றொரு பொறுப்பு பேராசிரியராக உள்ள பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் கூறுகையில், இணைய வழிக் கல்வியில் எங்களுக்கு உள்ள ஆழ்ந்த அனுபவத்தால், தடையற்ற சேவையை, பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு, வளமான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய கல்வியாக வழங்கிட தயாராக உள்ளோம் என்கிறார்.

இந்தத் தனித்துவமான முதல் இணையவழி பட்டப்படிப்புக்கான வாய்ப்பை நாடெங்கும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பாக வழங்குவதே IITMன் நோக்கமாகும். இதில் சேரும் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே உயர்தரக் கல்வி அனுபவம் பெறுவதை IITM உறுதி செய்துகொள்ளும். மேலும் விவரங்களை இணையதளத்தில் பெறலாம்.

IITM பற்றி:
இந்திய தொழில்நுட்ப கழகம் – மெட்ராஸ் 1959 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த” நிறுவனமாக நிறுவப்பட்டது. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 16 கல்விசார் துறைகளாகும் பல்துறை தொடர்புடைய ஆராய்ச்சி கல்வி மையங்களாகவும் செயல்படுகிறது. இக்கல்வி நிறுவனம் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளான B.Tech., M.Sc., M.B.A., M.Tech., M.S., மற்றும் Ph.D., ஆகியவற்றை பல்வேறு நிபுணத்துவங்களில் வழங்குகிறது.

ஐஐடி மெட்ராஸ் 580 ஆசிரியர்கள் மற்றும் 9500 மாணவர்களைக் கொண்ட உறைவிடக் கல்வி நிறுவனமாகும். 18 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். IITM சிறந்த தொழில் முனைவோர் கலாச்சாரத்தை, வலிமையான கல்வி ஆதரவுடன் IIT Incubation Cell வழியாகவும் வளர்க்கிறது.

இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டு துறையால் வெளியிடப்பட்ட தேசிய தரப்பட்டியல் 2020-ல் இரண்டாவது முறையாக ஒட்டுமொத்த பிரிவில் IITM No.1 ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகள் பிரிவிலும் No.1 ஆக கடந்த ஐந்து வருடங்களாக 2016 முதல் 2020 வரை திகழ்ந்துள்ளது. மனிதவள மேம்பாட்டுத் துறையின் Atal Ranking of Institutions on Innovation Achievements (ARIIA) 2019 தர வரிசையும் IITM-ஐ ‘Top innovative Institution’ஆக தேர்வு செய்துள்ளது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader