கொரோனா பரிசோதனை முடிவை 1மணி நேரத்தில் அறிந்து கொள்ள கோவிராப் கருவி

Get real time updates directly on you device, subscribe now.

உலகையே ஆட்டிப்படைக்கு கொரோனா வைரஸ் குறித்த தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. எனவே கொரோனா குறித்து முன்னெச்சரிக்கை மற்றும் கொரோனா தாக்கத்தை உறுதிப்படுத்தும் சோதனை நாள்தோறும் மக்களுக்கு ஒரு சவாலாக உள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதித்தவரை பரிசோதனை மோற்கொள்ளும் போது அதன் முடிவை ஒருமணி நேரத்தில் தெரிந்து கொள்ளும் கருவியான கோவிராப்பிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது.

கரக்பூர் ஐஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கோவிராப் என்னும் கருவியை கண்டு பிடித்துள்ளனர். எளிய முறையில் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனையின் முடிவுகளை ஒரு மணிநேரத்தில் செல்போன் செயலியின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், புதிய மருத்துவ கண்டுபிடிப்பின் மூலம், தற்சார்பு இந்தியாவின் இலக்கை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எட்டி இருப்பதாக பாராட்டியுள்ளார்.

#covidkit #covidupdates #covid19 #covirap #covidtestresult #in4net

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More