IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து பட்டியல் வெளியீடு – இவர் தான் நம்பர் 1 பணக்காரர்

Get real time updates directly on you device, subscribe now.


இந்தியாவில் நம்பர் 1 பணக்காரர்கள் பட்டியலில் இந்த வருடமும் முகேஷ் அம்பானிதான் முதலிடத்தில் உள்ளார்.


ஐஐஎஃப்எல் வெல்த் மற்றும் ஹீருன் நடத்திய உலகப்பணக்காரர் பட்டியலில் 2019ம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்களின் எண்ணிக்கை 953 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடமாகவும் அவரது சொத்து மதிப்பு ரூ.380700 கோடியாகும். பட்டியலில் இரண்டாவது பணக்காரராக லண்டன் வாழ் இந்தியர் ஹிந்துஜா குடும்பம் உள்ளது. அவரது சொத்து மதிப்பு ரூ.186500 கோடியாகும். மூன்றாவதாக விப்ரோவின் அஜிம் பிரேம்ஜி அவரது சொத்து மதிப்பு ரூ.117100 கோடியாகும்.


ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எல்.என்.மிட்டல் ரூ.107300 லட்சம் கோடி மதிப்புடன் நான்காம் இடத்தில் உள்ளார். ஐந்தாம் இடத்தில் கௌதம் அதானி ரூ.94500 கோடி மதிப்புடன் உள்ளார்.

உதய் கோடாக் (ரூ.94100 கோடி), சைரஸ் எஸ் பூனாவாலா (ரூ.88800 கோடி), சைரஸ் பலோன்ஜி மிஸ்திரி (ரூ.76800 கோடி), ஷபூர் பலோன்ஜி (ரூ.76800), திலீப் ஷாங்கி (ரூ.71500 கோடி) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


இவர்களின் சொத்துமதிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 2 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#MukeshAmbani #IIFL #HurunIndia #Top10 #RichestList #In4Net

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More