IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி – ஜி.கே.வாசன்

Get real time updates directly on you device, subscribe now.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணியில் தொடர்வோம் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போது பரரபரப்பாகி உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போதே அதிகம் பேசப்பட்டு வருகின்றது. மேலும் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசும்போது, கூட்டணி தர்மத்தை கடைபிடித்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணியில் தொடர்வோம். கூட்டணி தர்மத்தை கடைபிடித்து வந்தால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம்.

தற்போது அறிமுகப்படுத்திய வேளாண் திருத்த சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் திமுக அரசு அதற்கு எதிராக அரசியல் செய்து வருகின்றது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதன் பிரதிபலிப்பு தெரியவரும் என்றார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader