IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் சாதனை

Get real time updates directly on you device, subscribe now.

ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை இந்திய அணி கேப்டன் விராத்கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்ற நிலையில் ஐ.சி.சி. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும், துணை கேப்டன் ரோஹித் சர்மா 834 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். மேலும் இந்திய அணி துவக்க வீரர் கே.எல்.ராகுல் 71-வது இடத்திலும், ஸ்ரேயாஸ் அய்யர் 81-வது இடத்திலும் உள்ளனர்.

இதே போல் மே.இ.தீவுகள் வீரரும், விக்கெட் கீப்பருமான சாய் ஹோப் 9-வது இடத்திலும், சிம்ரன் ஹெட்மெயர் 19-வது இடத்திலும், நிகோலஸ் பூரன் 30-வது இடத்திலும் உள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader