IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தோனியை புறக்கணிக்கிறதா இந்திய அணி ?

3


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை இந்திய அணி புறக்கணிக்கிறதா என்று ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர். இந்திய அணி அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாடும் போட்டியில் தோனி தேர்வு செய்யப்படவில்லை.


இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் வெற்றி கேப்டன், டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி முன்னணி அணியாக வலம்வர காரணமானவர் எம்.எஸ்.தோனி. இந்திய அணிக்கு இரண்டு முறை உலகக் கோப்பை பெற்றுத்தந்தவர்.


இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகிய தோனி ராணுவ சேவையில் ஈடுபட்டார். இதற்கிடையே இந்திய சொந்தமண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

மீண்டும் அணித்தலைவராக தோனியே பொறுப்பேற்பார்


முதல் போட்டி செப்டம்பர் 15-ல் தரம்சாலாவில் நடக்கிறது. இத்தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டது. இதில் தோனிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இவருக்கு பதில் விண்டீஸ் தொடரில் பங்கேற்ற ரிஷப் பாண்டிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கேப்டன் கோஹ்லி, தவான் , ரோகித் உட்பட முன்னணி வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.


சமீபத்தில் விராட் கோஹ்லி என் வெற்றிக்கு முழு காரணம் என் மனைவி அனுஷ்கா தான் என்று கூறியிருந்தார். இதற்கு தோனியின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தோனியை தேர்ந்தெடுக்காதது தோனியின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். ஒருவேளை இந்திய கிரிக்கெட் அணி தோனியை புறக்கணிக்கிறார்களா என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

#MSDhoni #IndianTeam