IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கணவன் இறந்த துக்கத்தால் மனைவியும் தற்கொலை

139


கணவர் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் பசு வந்தனை அருகே உள்ள போடுபட்டி காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சாவித்திரி. இவர்களது மகள் விஜயலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துபாண்டி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை.


இந்த தம்பதியர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். குழந்தை இல்லாததை தாங்கி கொள்ள முடியாத முத்துபாண்டி தனது வீட்டிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனால் விஜயலட்சுமி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.


முத்துபாண்டி இறந்து மூன்று மாதங்கள் கடந்தன. ஆனாலும் விஜயலட்சுமி தினமும் கணவரை நினைத்து மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஜயலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


பின்னர் இது குறித்து பசுவந்தனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


#Husbend #suicide #Wife #death