IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இப்படியும் ஒரு புருசனா? மனைவிக்காக நாட்டு வெடிகுண்டை கட்டிக்கொண்டு தற்கொலை முயற்சி!

Get real time updates directly on you device, subscribe now.


நெய்வேலியில் தனது மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி, மாமனார் வீட்டிற்கு கழுத்தில் நாட்டு வெடிகுண்டுடனும், உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி கொண்டும் தற்கொலை செய்து கொள்ள வந்த மருமகனின் உயிரை போலீஸ்காரர் காப்பாற்றியுள்ளார்.


நெய்வேலி மாவட்டத்தில் தனது மனைவியை சேர்த்து வைக்குமாறு மாமனார் வீட்டின் முன்பு மணிகண்டன் என்பவர் கழுத்தில் நாட்டு வெடிகுண்டை சுற்றிக்கொண்டும், கையில் பெட்ரோல் கேனுடனும் வந்து தற்கொலை செய்ய முயற்சித்தார். இதை பார்த்த மாமியார் தெருவில் வந்து கத்தினார். அந்த வழியாக வந்த நெய்வேலி நகர முதன்மை காவலர் பாலச்சந்திரன் இது பற்றி விசாரித்தார்.


அதன் பின்னர் அவர் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது மணிகண்டன் தனது கழுத்தில் பயங்கரமான நாட்டு வெடிகுண்டுகளை சுற்றி கொண்டும், உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி கொண்டும், பின்னர் கையில் தீப்பெட்டியும் வைத்திருந்ததை பார்த்த கவலர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கவலரை பார்த்த மணிகண்டன் தீப்பெட்டியை பற்ற வைக்க முயற்சித்துள்ளார். காவலர் மணிகண்டனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். காவலர் பாலச்சந்திரன் உயிரை பணயம் வைத்து, சூசமாக பேசி தற்கொலை செய்து கொள்ளாமல் பல மணி நேரமாக தடுத்து கொண்டிருந்தார்.

டிக்டாக் பண்றீங்களா? உங்க வீடியோவும் ஆபாச தளத்துக்குப் போகலாம்!


ஆனால் மணிகண்டன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி கொண்டிருந்ததால் அக்கம் பக்கத்தினர் பயத்தில் உரைந்து அதே இடத்தில் நின்று கொண்டிருந்தனர். மேலும் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி கொண்டு இருந்தார். இந்நிலையில் விபரீதத்தை உணர்ந்த காவலர் பாலச்சந்திரன் நெய்வேலி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தலைமை காவலர் சங்கர் மற்றும் காவலர் ராஜியும் சமாதனம் பேசி மணிகண்டனை மீட்க முயற்சித்தனர்.


பாலச்சந்திரன் இறுதியில் மணிகண்டனின் இரண்டு வயது குழந்தையை தூக்கி கொண்டு மூன்று பேரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளுவோம் என்று துணிச்சலாக கூறி, மணிகண்டனின் அருகில் சென்றார், பின்னர் மணிகண்டன் அழுதப்படியே தற்கொலை முயற்சியை கைவிட்டு, குழந்தையை தூக்கினான். அவரது உடலில் இருந்த வெடிக்குண்டுகளை அகற்றிவிட்டு, உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றப்பட்டது.


பின்னர் மணிக்கண்டன் தான் விஷம் அருந்தியதாக கூறினான். அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரை மீட்டு நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.


உயிரை பணயம் வைத்து மணிகண்டனை காப்பாற்றிய முதன்மை காவலர் பாலச்சந்திரனுக்கு பொது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டு குவிந்து வருகிறது.


#husbend #attempt #Suicide #bomb

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader