IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கொன்று தலையை நடுவீட்டில் புதைத்த ஆசாமி!

35

பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கொன்று தலையை நடுவீட்டில் புதைத்து வைத்திருந்த ஆசாமி கைது செய்யப்பட்டார். தலையை மட்டும் வீட்டில் புதைத்ததற்கு அந்த ஆசாமி சொன்ன காரணம் போலீசாரை திகைப்படையச் செய்தது.


மத்திய பிரதேச மாநிலத்தின் அனுப்பூர் மாவட்டம் அருகே உள்ளது தூத் மேனியா என்ற கிராமம். இந்த கிராமம் அருகே காட்டுப்பகுதியில் இரண்டு சடலங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு சென்று பார்த்தபோது ஒரு உடலில் தலையில்லாமலும், மற்றொரு உடலில் கத்தி குத்துடனும் சடலங்கள் இருந்துள்ளன. இதையடுத்து அந்த சடலத்தை மீட்டு போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.


விசாரணையில் சடலமாக கிடந்தது அந்த கிராமத்தை சேர்ந்த பகவந்தின் கோண்ட் ( வயது 65) மற்றும் அவரது மனைவி பெஷானி கோண்ட் (வயது 60 ) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவ்விசாரணையில் ரத்தம் படிந்த கத்தி மற்றும் சட்டையுடன் பகவந்தின் உறவினர் ஒருவர் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

தற்கொலை செய்த மாணவியின் உருக்கமான கடிதம்

கொலை குறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், பெஷானி கோண்ட் தனது மாட்டுத் தொழுவத்திற்கும், வீட்டிற்கும் பில்லி சூனியம் வைத்ததாகவும், அதனால் தன்னுடைய குழந்தை மற்றும் மாடுகள் இறந்ததாகவும், இதன் காரணமாக தான் பெஷானியை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.


பெஷானியாவின் தலை எங்கே என்று போலீசார் கேட்டதற்கு, அவரது தலையை தன் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த போலீசார் அதற்கான காரணத்தைக் கேட்டனர். அதற்கு பதில் அளித்த கொலையாளி, கொல்லப்பட்டவரின் தலையை வீட்டில் வைத்திருப்பதன் மூலம், அந்த நபரின் ஆவி தன்னை ஒன்றும் செய்யாது. இல்லையென்றால் ஆவி என்னை பழிவாங்கி விடும் என்பதால் நடு வீட்டிலேயே புதைத்து வைத்ததாக கூறியிருக்கிறார்.


போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த தலையை தோண்டி எடுத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்து, தலையை வீட்டுக்குள்ளேயே புதைத்து வைத்திருந்த இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#MURDER #Crime #husbandwife