IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தீபாவளி ஆஃபர்! சின்ன வீட்டுக்கு ரூ.5 லட்சத்திற்கு கணவரை விற்ற “பாசமான” மனைவி

0 31

கர்நாடகாவில் மனைவி ஒருவர் கடன்பிரச்சனை அதிகமானதால் ரூ.5 லட்சத்திற்கு கணவரை விற்று கடன் பிரச்சனையை சமாளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவரது மனைவி கனகதுர்கா. இவர்களுக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருந்துள்ளது. தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் பசவராஜ், வீட்டிற்கு தினமும் தாமதமாக வந்துள்ளார். சில நாட்கள் வீட்டுக்கே வராமல் இருந்திருக்கிறார்.

இவரது நடத்தையில் சந்தேகமடைந்த மனைவி இவரது செயல்பாடு குறித்து கணவரை கண்காணிக்க தொடங்கினார். இதில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி செல்வதும், அவரது வீட்டிலேயே தங்குவதுமாக இருந்துள்ளார்.

இதைப்பார்த்த அவரது மனைவி கனகதுர்கா கணவனிடம் சண்டை போட்டுள்ளார். இருப்பினும் கணவர் திருந்துவதாக தெரியவில்லை. இதையடுத்து கனகதுர்கா, அந்த பெண் வீட்டுக்கே சென்று தகராறு செய்துள்ளார். உன்னுடன் வந்து தங்கி விடுவதால் கணவர் கடன் கட்டாமல் இருக்கிறார் என்று சத்தம் போட்டிருக்கிறார்.

இந்நிலையில் பசவராஜிடம் தொடர்பு வைத்திருந்த பெண், கனகதுர்காவை தொடர்பு கொண்டு உனது கடனை அடைக்க நான் உதவி செய்கிறேன் என்றார். ஆனால் அதற்கு பதிலாக நீ உனது கணவரை எனக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

கணவரா கடனை கட்ட பணமா என்று துர்காவும் யோசிக்க ஆரம்பித்தார். இறுதியில் கடன் பிரச்சனை தான் முக்கியம் என்பதால் கணவரை விற்க முடிவு செய்தாள் கனகதுர்கா. இதையடுத்து இருபெண்களும் அமர்ந்து பேசினர். ரூ.15 லட்சத்திற்கு ஆரம்பித்து இறுதியில் ரூ.5 லட்சத்திற்கு கணவரை விட்டுத் தருமாறு கூறி அந்த பெண் பேரம் பேசி இறுதியில் கணவரை விற்க கனகதுர்கா முடிவு செய்தார்.

இதையடுத்து கனகதுர்காவும் கணவரை இனி அழைத்து தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறி அந்த பெண்ணிடமிருந்து ரூ.5 லட்சத்தை பெற்றுக் கொண்டார். பசவராஜும் பரவசமாகி அந்த பெண்ணுடன் சந்தோசமாக குடித்தனம் நடத்தி வருகிறாராம்.