IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

குழந்தையை கவனிக்கச் சொன்னதால் மனைவியை கொலை செய்த கணவன்!

11

குழந்தையை கவனிக்க சொன்ன மனைவியை கணவர் கொலை செய்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னை அருகே பொன்னேரி அரவாக்கத்தை சேர்ந்தவர் திரேச் குமார். இவருடைய மனைவி கோமதி (வயது 27). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. திரேச் குமார் ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். அதனால் இவர் குடும்பத்துடன் அங்கேயே வசித்து வந்தார்.


கடந்த இரு நாட்களுக்கு முன்பு திரேச் குமார் சமையலுக்காக வீட்டுக்கு சிக்கன் எடுத்து வந்துள்ளார். அதனை சமைக்கச் சொல்லி மனைவியிடம் கொடுத்துள்ளார். அப்போது மனைவி சமையல் முடியும் வரை குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் திரேச் குமார் குழந்தையை கவனிக்க முடியாது என்று மறுத்துள்ளார்.


அம்மாவை அசிங்கப்படுத்திய ஆசிரியரைக் குத்திக் கொன்ற மாணவன்

இதனால் திரேச் குமாருக்கும், அவரது மனைவி கோமதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் ஒரு கட்டத்திற்கு மேல் கைகலப்பாக மாறியது. இதனால் திரேச் குமார் கோமதியை அடித்து உதைத்துள்ளார். ஆத்திரம் தாங்காததால் வயரால் கழுத்தை நெரித்துள்ளார். இதில் கோமதி இறந்து விட்டார்.


இதையடுத்து திரேச் குமார், தான் கொலை செய்ததை மறைத்து கோமதி தூக்கு போட்டு தற்கொலை செய்ததாக கோமதியின் பெற்றோரிடம் கூறிவிட்டார். பின்னர் சடலத்தை உறவினர்கள் உதவியுடன் பொன்னேரி அரவாக்கத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இறுதிச் சடங்குகள் செய்யவிருந்த நேரத்தில் கோமதியின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது,


இதனால் அவர்கள் கோமதி சாவில் சந்தேகம் உள்ளது என ஆந்திர மாநிலம் நாயுடுபுரம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் அரவாக்கம் விரைந்து வந்து கோமதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


மருத்துவ மாணவரின் உருக்கமான கடிதம் சிக்கியது

பரிசோதனையில் கோமதி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து திரேச் குமாரை கைது செய்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் முதலில் திரேச் குமார் கொலை செய்ததை ஒப்புக்கொள்ளவில்லை. தீவிர விசாரணைக்கு பிறகே அவர் கொலை செய்ததை ஒப்பு கொண்டார். மேலும் போலீசார் இது குறித்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

#murder #husband #wife #crime