IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூர கணவர்!

Get real time updates directly on you device, subscribe now.

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், மனைவியை துண்டு துண்டாக வெட்டி, உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களில் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்த கணவர் போலீஸ் சரணடைந்துள்ளார்.


டெல்லியில் கிராரி பகுதியை சேர்ந்தவர் அஷு (வயது 33). இவர் கம்ப்யூட்டர் சர்வீஸ் கடை வைத்திருந்தார். இவருடைய மனைவி சீமா (வயது 30). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சீமா பார்ப்பதற்கு அழகாக இருப்பாராம். அக்கம் பக்கத்தார் எல்லோருடனும் சகஜமாக பழகியிருக்கிறார். இது அஷுவிற்குப் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் மனைவியைக் கண்டித்துள்ளார்.

இப்படியும் ஒரு புருசனா? மனைவிக்காக நாட்டு வெடிகுண்டை கட்டிக்கொண்டு தற்கொலை முயற்சி


ஆனாலும், சீமா தன் குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என தெரிகிறது. இந்நிலையில் சீமா மீது அஷுவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சீமாவின் நடத்தையை சந்தேகப்பட்ட அவர், அடிக்கடி சண்டை போட்டுள்ளார். தினமும் சீமாவுடன் சண்டை போடுவதையும், அவரது நடத்தை குறித்து திட்டுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் அஷு. இந்நிலையில் சண்டை முற்றியதால் அஷூ, தனது பேச்சைக் கேட்காத சீமாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.


சம்பவத்தன்று சீமாவை மற்றொரு வீட்டில் இருக்கும் சாமானை எடுத்து வரலாம் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றும் இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அஷு அரிவாளால் சீமாவை வெட்டியுள்ளார். அப்போதும் ஆத்திரம் தீராத அஷு சீமாவின் உடலை துண்டுத் துண்டாக வெட்டியிருக்கிறார். பின்னர கை, கால் மற்றும் தலையை வீட்டின் செப்டிக் டேங்க்கிலும், உடலை ஒரு பையில் போட்டு 2 கி.மீ தூரத்தில் உள்ள கால்வாயிலும் வீசியுள்ளார்.


கள்ளக்காதலியின் நல்ல காதலுக்கு துணைபோன வாலிபர் வெட்டிக் கொலை


இதையடுத்து தனது மகளிடம் பேசிய அஷு, சீமாவை கொலை செய்த தகவலைத் தெரிவித்து விட்ட்ய், அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ரத்தக் கரையுடம் போலீஸ் ஸ்டேசனுக்குள் சென்ற அஷுவைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் 8 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சீமாவின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. டெல்லியை உலுக்கிய இந்த கொடூர கொலை குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

#husband #wife #doubt #murder #crime

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader