IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்! கணவன் உட்பட 5பேர் கைது

Get real time updates directly on you device, subscribe now.

கேரளாவில் 25 வயது பெண்ணிற்கு அவரது கணவரே விருப்பமின்றி வலுக்கட்டாயமாக மதுக் கொடுத்து தனது மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 25 வயது இளம்பெண் தனது கணவர், இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவரது கணவர் மதுபோதைக்கு அடிமையானவர் என தெரிகிறது. தனது இரு குழந்தைகளுடன் மனைவியை புதுக்குறிச்சி கடற்கரை அருகேயுள்ள ஒருவரின் வீட்டிற்கு கணவர் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அப்பெண்ணிற்கு அவரது கணவர் வலுக்கட்டாயமாக மதுவைக் கொடுத்துள்ளார். அதன்பின்னர் தனது நண்பர்களை அப்பெண்ணின் கணவர் அழைத்துள்ளார். பின்பு 5 வயது மூத்த மகன் முன்பே அந்த இளம்பெண்ணை கணவர் உள்பட அவரது நண்பர்கள் 4 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பின்னர் அங்கிருந்து தப்பிய அந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து இந்த சம்பவம் வெளிவந்துள்ளது. புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார் பெண்ணின் கணவர் உள்பட 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader