IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

முதல் 2 திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணம் செய்ய மன்மதனை நைய புடைத்த மனைவிகள்!!

36

முதல் இரண்டு மனைவிகளையும் மறைத்துவிட்டு மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற மன்மதனை முதல் மனைவிகள் இருவரும் சரமாரியாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.


கோவை அருகே உள்ள அரசூர் பகுதியில் தனியார் நிறுவனத்தின் முன்பு ஒரு வாலிபரை இரு பெண்கள் சரமாரியாக தாக்கிக் கொண்டிருந்தனர். பொது இடத்தில் வாலிபரை பெண்கள் நைய புடைத்துக் கொண்டிருந்ததைப் அங்கி நின்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். வாக்குவாதம் செய்தபடியே அடித்து உதைத்ததால் இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.


தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டனர். வாலிபரை தாக்கிய பெண்களையும் அவர்கள் உடன் இருந்தவர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கூறியதை கேட்டு போலீசார் வியந்தனர்.


சூலூர் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் அரங்க அரவிந்த் தினேஷ் (வயது 30). இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருப்பூரை சேர்ந்த பிரியதர்ஷினியுடன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில மாதங்களிலேயே அரங்க அரவிந்த் தினேஷும் அவரது குடும்பத்தினரும் பிரியதர்ஷினியை கொடுமை படுத்தியுள்ளனர். அது மட்டுமின்றி அரங்க அரவிந்த் தினேஷ் மற்றும் அவருடைய தந்தையும் பாலியல் ரீதியான துன்பங்களை கொடுத்துள்ளனர். இதனால் பிரியதர்ஷினி வயிற்றில் இருந்த கரு கலைந்துள்ளது.இது அனைத்தையும் குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இனி இவர்களிடம் இருக்க முடியாது என முடிவு செய்து பிரியதர்ஷினி அவருடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.


16 வயது சிறுமியை 3வது திருமணம் செய்த ரோமியோ

இதையடுத்து தனியாக வசித்து வந்த அரங்க அரவிந்த தினேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-வதாக அனுப்பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இது குறித்து முதல் மனைவி பிரியதர்ஷினிக்கு சில நாட்களுக்கு முன் தெரிய வந்துள்ளது. பிரியதர்ஷினி செல்போனில் அனுப்பிரியாவுடன் தொடர்பு கொண்டு பேசியபோது, அனுப்பிரியாவும் கொடுமைகளை அனுபவிப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அரங்க அரவிந்த் தினேஷ் அடுத்ததாக 3வது திருமணத்திற்கு தயாராகி வந்ததும் தெரியவந்தது.


இதனால் ஆத்திரம் அடைந்த இவர்கள், அரங்க அரவிந்த் தினேஷ் வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று பேசியுள்ளனர். அரங்க அரவிந்த் தினேஷ் முதல் 2 மனைவிகளின் பேச்சைக் கேட்காததால் வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து இருவரும் சேர்ந்து கணவனை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.


இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், வாலிபரின் இரண்டு மனைவிகளின் திருமணமும் திருப்பூர் மாவட்டத்தில் நடந்ததால், திருப்பூர் அல்லது போத்தனுரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம், என்றனர்.


பிரியதர்ஷினி மற்றும் அவரது உறவினர்கள் கூறுகையில், ஏற்கனவே திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும், அந்த புகார் மீது போலீசார் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும் கூறினர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடு பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

#cheating #husband #wife #marriage