IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இந்தியர்களின் வாக்குகளை கவருவதற்காக பிரதமர் மோடியுடன் ட்ரம்ப் பங்கேற்பு ?

17


அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற விஷயம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் அடுத்த வருடம் 2020ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் பங்கேற்றுள்ளார்.


இந்திய அமெரிக்கர்களின் வாக்குகளை கவருவதற்காகவே குடியரசுக் கட்சியை சேர்ந்த டிரம்ப் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அதற்கேற்றாற்போல பிரதமர் மோடியும் மீண்டும் டிரம்ப் அதிபராவர் என்று கூறினார். அதற்கு டிரம்ப் புன்னகைத்தார்.


அமெரிக்காவில் சுமார் 40 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களின் பெரும்பாலானர்கள் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சிக்கே வாக்களிப்பது வாடிக்கையாக இருந்துள்ளது.


இந்நிலையில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் சுமார் 25 நிமிடம் பேசினார். அப்போது, அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்திய வம்சாவளியினர் பங்காற்றி வருகின்றனர். அமெரிக்க – இந்திய நாடுகளுக்கிடையேயான நட்புறவு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக அமைந்துள்ளது.


பிரதமர் மோடி அமெரிக்காவின் சிறந்த நண்பர். அவர் இந்தியாவின் வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறார். மோடியின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையால் 30 லட்சம் இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.


பிரதமர் மோடியின் ஆட்சியில் வலிமையான இந்தியாவை உலகமே திரும்பி பார்க்கிறது. தீவிரவாதிகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க இருநாடுகளுமே உறுதியான உள்ளன என்று ஹவுடி மோடி நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசினார்.
#HowdyModi #NarendraModi #DonaldTrump #In4Net #EnergisingAmerica