தமிழ் ஆங்கிலம் எழுத்து இலக்கணப்பிழை தவிர்ப்பது எப்படி ?

Get real time updates directly on you device, subscribe now.

டுவிட்டர், ஃபேஸ்புக், ஜிமெயில், Blog, WhatsApp Web போன்ற சமூக வலைதளங்களில் எழுதும் போது எழுத்து, இலக்கணப் பிழையுடன் தமிழ் ஆங்கிலம் மொழிகளில் எழுதுகிறோம். அதைத் தவிர்க்க எளிமையான வழி உள்ளது (மற்ற மொழிகளுக்கும் கூட).

Language Tool

Language Tool என்ற நீட்சியை (Extension / Add-On) உலவியில் (Browser) நிறுவிக்கொண்டால் போதுமானது. இதன் பிறகு தமிழ் ஆங்கிலத்தில் இலக்கணப் பிழையுடன் எழுதினால் அதுவே தவறுகளைச் சுட்டிக்காட்டும்.

இரண்டு மொழிகளுக்குமே மிகச்சிறப்பாகப் பிழைகளைத் திருத்துகிறது.

உலவியில் மட்டுமே!

எந்த உலவியில் நிறுவுகிறீர்களோ அதில் மட்டுமே இதன் பரிந்துரைகளைக் காட்டும். உலவியை விட்டு வெளியே வந்து வேறு மென்பொருளில் பயன்படுத்த முடியாது.

ஆங்கிலத்துக்கு இலக்கண & எழுத்துப் பிழைகளையும், தமிழுக்கு இலக்கணப் பிழையை மட்டும் சுட்டிக்காட்டும்.

அவசரத்தில் எழுதும் போது இலக்கண, எழுத்துப்பிழைகள் வழக்கமானது. எனவே, இந்த வசதி மூலம் அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியும்.

இலக்கண எழுத்துப் பிழைகளைத் தவிர்ப்போம்

தமிழில் எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுத வேண்டும் என்பதை 95% பின்பற்றி வந்தாலும், சில நேரங்களில் ஓரிரு எழுத்துப்பிழைகள் வந்து விடுகின்றன.

தமிழ் ஆங்கிலம் அல்லது வேறு மொழிகளோ அம்மொழியைச் சிதைக்காமல் முடிந்தவரை சரியாக எழுத முயலுங்கள். அவற்றைத் தொடரும் போது உங்களுக்கே நாம் சரியாக எழுதுகிறோம் என்ற பெருமையை உணர முடியும்.

அனைத்து உலவிகளுக்கும் இவ்வசதியுண்டு

பின்வரும் தளத்தில் சென்று உங்கள் விருப்ப உலவியைத் தேர்ந்தெடுத்து நீட்சியை நிறுவி இலக்கண (இரண்டு மொழிகளுக்கும்), எழுத்துப் பிழை (ஆங்கிலம் மட்டும்) இல்லாமல் எழுதி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழலாம்.

https://languagetoolplus.com/

மாதக்கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் (Advance) முறை உள்ளது ஆனால், Basic (இலவசம்) முறையே நமக்குப் போதுமானது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader