IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வாட்ஸ்ஆப் குரூப்பில் வீடியோ கால் அழைப்பது எப்படி ?

Get real time updates directly on you device, subscribe now.

COVID-19 இன் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முடக்கப்பட்ட நிலையில், நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்திருக்க முன்பை விட இப்போது தொழில்நுட்பத்தையே அதிகம் சார்ந்திருக்கிறோம்.

குரூப் வீடியோ அழைப்புகளைச் செய்ய உங்களில் பெரும்பாலோர் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்திருக்கலாம், ஆனால் புதிய பயன்பாடுகளை நிறுவுவதற்குப் பதிலாக, குரூப் வீடியோ அழைப்புகளைச் செய்ய நீங்கள் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தலாம்.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த செய்தியிடல் செயலி மிகவும் பிரபலமானது. இப்போதெல்லாம் வாட்ஸ்ஆப்பைப் பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் உள்ள எவரையும் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். எனவே, நீங்கள் சில பட்டன்களைத் தட்டினால், குரூப் வீடியோ அழைப்பை மேற்கொள்ள விரும்பும் நபர்களுடன் நேராக முகத்தைப் பார்த்துக்கொண்டே பேசலாம்.

வீடியோ அழைப்புகளுக்கு வாட்ஸ்ஆப்பைப் பயன்படுத்துவதில் இருக்கும் மற்றொரு நன்மை என்னவென்றால், உங்கள் எல்லா அழைப்புகளும் உங்கள் தனியுரிமையைக் காப்பாற்றுவும் அல்லது உளவு பார்க்கப்படுவதில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கும் வகையில் பாதுகாக்கப்படுகின்றன.

வாட்ஸ்ஆப் குரூப் வீடியோ அழைப்பை எவ்வாறு செய்வது?

  • வாட்ஸ்ஆப் அதிகபட்சம் நான்கு பங்கேற்பாளர்களுடன் குரூப் வீடியோ அழைப்புகளை அனுமதிக்கிறது, அதாவது வீடியோ காலிங்கின் போது உங்களுடன் பேச மூன்று பேரை அழைக்கலாம்.
  • வாட்ஸ்ஆப்பைத் திறக்கவும். முகப்புத் திரைக்கு (Home Screen) செல்லவும் மற்றும் “அழைப்புகள்” (Calls) பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
  • மேல் வலது மூலையில் உள்ள “அழைப்பு” (Calls) ஐகானை அழுத்தவும். இது உங்கள் தொடர்புகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
  • கீழே ஸ்கிரோல் செய்து, அழைக்க ஒரு தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும். அவர்களை அழைக்க அவர்களின் பெயரை அழுத்தவும்.
    மேல் வலது மூலையில் உள்ள “பங்கேற்பாளரைச் சேர்” (Add Participant) பட்டனை அழுத்தவும்.
  • மூன்றாவது பங்கேற்பாளரைத் தேர்ந்தெடுக்கவும். அவர்களை அழைப்பில் சேர்க்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.
  • நான்காவது பங்கேற்பாளரைச் சேர்க்கவும் இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும், குழு அழைப்பைப் பெற நீங்கள் தயாராக இருப்பீர்கள்.

இதை செய்தவுடன் உங்கள் நண்பர்களுடன் ஜாலியாக பேசி வீட்டில் இருக்கும் இந்த நேரத்தை சந்தோசமாக செலவாக்கலாம்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More