உங்கள் ஐபோனைக் கொண்டு வெப் கேமரா உருவாக்குவது எப்படி?

Get real time updates directly on you device, subscribe now.

மொபைல் சாதனங்களில் உள்ள கேமராக்களை பயன்படுத்தி வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்த முடியும். இதேப்போன்று லேப்டாப்பிலும் வீடியோ வெப் கேமரா தரப்பட்டுள்ளது.

டெக்ஸ்டாப்பில் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு பிரத்தியேக கேமராவினை பயன்படுத்துவது அவசியமாcம். இதற்கு பதிலாக ஐபோனினை வெப் கேமராவாக பயன்படுத்தக்கூடிய வசதி தற்போது காணப்படுகின்றது.

இதுபோன்று மாற்றியமைப்பதற்கு ஆப்ஸ் ஸ்டோர் சென்று EpocCam எனும் அப்ளிக்கேஷனை டவுண்லோடு செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்கள் Mac அல்லது விண்டோஸ் கணினியில் சென்று www.kinoni.com எனும் இணையத்தளத்திற்கு சென்று பொருத்தமான முறைமை மென்பொருளினை தரவிறக்கம் செய்ய வேண்டும்.

தரவிறக்கம் செய்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கணினியை மீளவும் செயற்படுத்தவும். தொடர்ந்து ஐபோனில் EpocCam அப்ளிக்கேஷனை ஓபன் செய்யவும். தொடர்ந்து ஐபோனினை USB கேபிள் அல்லது Wi-Fi ஊடாக கணினியுடன் இணைக்க வேண்டும். இணைக்கப்பட்ட பின்னர் EpocCam ஆனது தானாகவே கணினியை செலக்ட் செய்து வீடியோவினை காண்பிக்க ஆரம்பிக்கும்.

#iphone camera #web camera #in4net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader