IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஏற்றுமதி தொழில் துவங்குவது எப்படி ?

Get real time updates directly on you device, subscribe now.

ஏற்றுமதி தொழில் பற்றிய தகவல்களைத் தேடி அலைந்து கொண்டிருப்பவரா நீங்கள் அப்படியானால் இந்த வலைப்பதிவு உங்களுக்காகத்தான்.

ஏற்றுமதி துறையில் நுழைய நினைப்பவர்களுக்கு நல்ல ஒரு நண்பனாய் இந்த தளம் நிச்சயம் இருக்கும். பதிவுகளை படிக்கும்போது அது உங்களுக்கே தெரியும்.

ஏற்றுமதி செய்வது எப்படி ?

இந்த கேள்விக்கு விடை தேடி நிச்சயம் நீங்களும் அலைந்திருப்பீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் நீங்களும் கூட நினைத்திருக்கலாம் ஏற்றுமதி செய்ய பெரிய முதலீடும், நிறைய ஆங்கில அறிவும் தேவைப்படும் என்று.

அப்படி நீங்கள் நினைத்திருப்பிர்களானால் அந்த எண்ணத்தை முதலில் அளித்துக் கொள்ளுங்கள். அதற்கு தேவைப்படுவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். தன்னம்பிக்கை! தன்னம்பிக்கை!! தன்னம்பிக்கை!!!.

“முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்” இது முதுமொழி.

ஏற்றுமதி என்றல்ல எந்த துறையாயினும் சரி அதை முழு ஈடுபாட்டோடு, முழு நம்பிக்கையோடு, முழு மனதோடு செய்யுங்கள். என்றுமே அதன் எஜமானன் நீங்களாகத்தான் இருப்பீர்கள். உங்களாலும் முடியும்.

ஏற்றுமதி செய்ய ஆர்வமிருந்தும், ஆசையிருந்தும் வழி தெரியாமல் திசை மாரியோர் எத்தனையோ பேர். அந்த வரிசையில் நீங்களும் சேர்ந்து விடாதீர்கள். ஏற்றுமதியின்றி எந்த துறையிலும் உள் நுழையும் முன், முதலில் அதன் நெழிவு சுழிவுகளை கற்றுக் கொள்ளுங்கள். உங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

அப்படி ஏற்றுமதி துறையின் நெழிவு சுழிவுகளை கற்றுக் கொடுக்கும் ஒரு தளம்தான் இந்த தளம். இந்த தளத்தில் ஏற்றுமதி நிறுவனம் தொடங்குவதிலிருந்து, எப்படி நீங்கள் ஒரு வெற்றிகரமான ஏற்றுமதியாளர் ஆவது என்பது வரை அனைத்து விபரங்களையும் தந்திருக்கிறேன்.

Intellectual Property Protection | Trade Marks

ஏற்றுமதிக்கென ஆங்கிலத்தில் எத்தனையோ வலைப்பதிவுகள் இருந்தாலும், நம் தமிழ் நண்பர்களுக்காக நம் தமிழ் மொழியில் ஒரு தளம் இது.

ஏற்றுமதி : எந்த ஒரு துறைக்கும் இல்லாத அளவுக்கு அரசு பல சலுகைகளை வழங்கும் ஒரே துறை ஏற்றுமதி. காரணம், அந்நியச் செலவாணி. எந்த ஒரு நாட்டுக்கும் அதன் அந்நியச் செலவாணி கையிருப்பு என்பது மிகமிக முக்கியம்.

அதிலும் நமது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அது இன்னும் முக்கியம். ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கும் சக்திகளில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று உண்டென்றால் அது இந்த அன்னிய செலவாணியாகத்தான் இருக்கும்.

இது அமெரிக்கா முதல்.ஆப்பிரிக்கா வரைஅத்தனை நாடுகளுக்கும் பொருந்தும். அப்படிப்பட்ட அந்த அந்நிய செலவாணியை நமது நாட்டுக்குள் கொண்டு வருவது யாரென்று நினைக்கிறீர்கள் ? வேறு யாருமல்ல நாம்தான். இதை நிச்சயம் நாம் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்.

அதனால்தான் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் அந்நாட்டின் ஏற்றுமதியாலருக்கு பல சலுகைகளை வழங்குகிறது.

நம் நாட்டில் கிடைக்கும் மூலிகைகள், பேப்பர், கைவினைப் பொருட்கள், மீன், கருவாடு, பருப்பு, வாழ்த்து அட்டை, மெழுகுவர்த்தி, சோளம், கம்பு, பாக்கு மட்டை, மாம்பழம், பேக்கரி பொருள், விவசாய பொருட்கள், அரிசி, மரசெக்கு எண்ணைகள், இளநீர், பட்டு வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை சிங்கபூர் மலேசியா நாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

ஏற்றுமதி என்பது யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய நல்ல தொழில் , மிகப்பெரிய பணக்காரர்களுக்கோ, அதிகம் படித்தவர்களோ , அல்லது ஆங்கிலம் சரளமாக பேசக்கூடியவர்களுக்கோ மட்டுமே உரிய தொழில் அல்ல.

ஏற்றுமதி செய்ய தனியாக ஒரு அலுவலகம் வைத்துதான் தொடங்க வேண்டும் என்பது இல்லை. நமது வீட்டிலிருந்தே தொடங்கலாம்.

இதற்கு அதிக பணம் வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் விட்டுவிடுகின்றனர். முதலில் குறைந்த முதலீட்டில் பொருட்களை தேர்ந்தெடுத்து ஏற்றுமதி செய்ய கற்றுகொள்ளுங்கள்.

நம் நாட்டின் பொருளாதார முதுகெழும்பே ஏற்றுமதிதான். ஆதலால்தான் நம் அரசாங்கம் மற்ற தொழில் துறையைவிட அதிகமான உதவிகளையும், சலுகைகளையும் தருகிறது மற்றும் நாம் அனுப்பக்கூடிய பொருளுக்கு ஏதேனும் சேதாரம் ஆகுமேயானால் அதற்கும் காப்பீடு தருகிறது நம் நாட்டில் கிடைக்கும் அரிசி வகைகளுக்கு அதிகபட்ச தேவை வெளிநாடுகளில் உள்ளது. நம் தமிழகத்தில் கிடைக்கும் பொருட்களை மற்றவர்கள் வாங்கி கூடுதல் லாபத்திற்கு ஏற்றுமதி செய்கின்றனர்,

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader