IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வீட்டிலேயே சுவையான ஒயிட் பாஸ்தா ரெசிபி செய்வது எப்படி ?

Get real time updates directly on you device, subscribe now.

2K கிட்ஸ்களின் பேவரைட் உணவு பாஸ்தா ஆகும். வீட்டிலேயே அம்மாக்கள் குழந்தைகளுக்கு எப்படி செய்து கொடுப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வேக வைக்க

பாஸ்தா – 1கப்
தண்ணீர் – 2 கப்
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

வதக்க

எண்ணெய் – 3 டீஸ்பூன்
பூண்டு – 5 பற்கள்
குடைமிளகாய் – 1 டீஸ்பூன்
கேரட் – 1 டீஸ்பூன்
சோளம் – 1 டீஸ்பூன்

மிக்ஸிங் செய்ய

வெண்ணெய் – 1 டீஸ்பூன்
மைதா மாவு – 2 டீஸ்பூன்
பால் – 1.5 கப்
உடைத்த காய்ந்த மிளகாய் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

Aromatics and Cosmetics

செய்முறை :

முதலில் பாஸ்தாவை தண்ணீரில் போட்டு 7 நிமிடங்களுக்கு வேக வைத்துக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து வதக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பொடியாக நறுக்கி 5 நிமிடங்கள் வதிக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் கடாய் வைத்து வெண்ணெய் விட்டு உருகியதும் மைதா மாவு சேர்த்து நன்கு வதக்கிக்கொண்டே இருங்கள். மாவு வெண்ணையுடன் நன்கு கலக்க வேண்டும்.

பின் பால் ஊற்றி வதக்கவும். நன்கு கெட்டியான சாஸ் பதம் வரும் வரை வதிக்கிக்கொண்டே இருக்கவும்.

பின் அதில் காய்ந்த மிளகாய், மிளகு, உப்பு சிறிதளவு சேர்த்து கலக்குங்கள்.

பின் வதக்கி வைத்துள்ள காய்களை சேர்த்து வதக்குங்கள்.

அடுத்ததாக வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து பிரட்டுங்கள். சாஸ் இறுகி, மசாலா சேர்ந்ததும் அடுப்பை அனைத்து விடுங்கள். வீட்டிலேயே ஈஸியான ஒயிட் சாஸ் பாஸ்தா தயார்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader