IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கண்களை சுற்றியுள்ள சுருக்கத்தை போக்க சூப்பரான ஹோம் ஐ க்ரீம் டிப்ஸ்

Get real time updates directly on you device, subscribe now.

பெண்களின் அழகை பிரதிபலிக்கும் கண்களுக்கு எப்போதும் தனி மகத்துவம் உண்டு. அப்படிப்பட்ட கண்களை பாதுகாப்பதில் நாம் முக்கியத்துவம் கொள்ள வேண்டாமா! அழகான பெண்களில் ஒரு சிலருக்கு கண்களை சுற்றியுள்ள சுருக்கம் அவர்களின் அழகை கெடுத்துவிடும். அதனை போக்க வீட்டிலேயே எளிதாக தயார் செய்யலாம் ஐ க்ரீம்.

கண்களுக்கு ஐ க்ரீம் அப்ளை செய்வதால் ஈரப்பதம் கிடைக்கும். அதோடு கண்களை சுற்றி விழும் சுருக்கம் முதுமைத் தோற்றத்தை உண்டாக்கும். எனவே அதை தவிர்க்க ஐ க்ரீம் அப்ளை செய்வது நல்லது. இதை கண்களுக்கு பக்கவிளைவுகள் இன்றி இயற்கையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தேங்காய் எண்ணெய் – 1/2 கப்

விட்டமின் ஈ எண்ணெய் – 6 காப்ஸ்யூல்

செய்முறை :

ஒரு இறுகிய மூடி கொண்ட டப்பாவில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள்.

அதில் விட்டமின் ஈ எண்ணெய்யை உடைத்து ஊற்றுங்கள்.

இரண்டையும் நன்கு கலந்துகொள்ளுங்கள்.

வாசனை திரவியம் தேவைப்பட்டால் 2 சொட்டு கலந்து கொள்ளுங்கள்.

வாசனை எண்ணெய் – தேவைப்பட்டால்

நன்கு கலந்ததும் டப்பாவை மூடி ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.

எண்ணெய் கெட்டிப் பதத்தில் உறைந்துவிடும்.

இரவு தூங்கும் முன் தேவையான அளவு எடுத்து கண்களை சுற்றித் தடவி மசாஜ் செய்யுங்கள்.

பின் அப்படியே தூங்கிவிட்டு மறுநாள் காலை துடைத்துவிடுங்கள்.

இப்படி தொடர்ந்து செய்ய கண்கள் கருவளையம், சுருக்கம் இன்றி ஆரோக்கியமாக இருக்கும்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader