IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கானல் நீராய் மாறுகிறதா மதுரை எய்ம்ஸ் ? ஆர்டிஐ தகவலால் அதிர்ச்சி

Get real time updates directly on you device, subscribe now.

மதுரையில் அடிக்கல் நாட்டி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிதி ஒதுக்குவது எப்போது என கேள்வி எழுந்துள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் இரா. பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில்,

“தமிழ்நாட்டின் மதுரையில் ரூ 1264 கோடி செலவில் புதிய எய்ம்ஸ் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முதலீட்டுக்கு முந்தைய நடவடிக்கைகளுக்கான பணிகள் M / s HITES க்கு வழங்கப்பட்டுள்ளன, மேலும் ஒப்பந்தப்புள்ளி வழங்குவதற்கு முந்தைய பணிகள் நடந்து வருகின்றன.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜிகா) கடன் அனுமதி அளித்தவுடன் பிரதான கட்டிடங்களின் ஒப்பந்தப்புள்ளி மற்றும் கட்டுமானம் தொடங்கும். திட்டத்தை நிறைவு செய்வதற்கான காலம் 45 மாதங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ரூ.1,264 கோடி செலவில் 750 படுக்கை வசதிகளுடன் 100 எம்பிபிஎஸ் இடங்களும், 60 செவிலியர் படிப்பு (நர்சிங்) இடங்களுடன் பிரம்மாண்டமாக மதுரை அருகே தோப்பூரில் அமையவுள்ள இந்த மருத்துவமனையை பிரதமர் மோடி மதுரைக்கு நேரில் வருகை தந்து அடிக்கல் நாட்டிச் சென்றார் என்பது குறிப்பிட தக்கது.

இதற்கிடையே, நாட்டின் மற்ற இடங்களில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிதிக்குழு நிறுவனத்திடம் கடனுதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் உள்ளது.

கடன் உதவி அளிக்கவுள்ள ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிதிக் குழுவினர் ‘பிரதம மந்திரி ஸ்வராஜ் சுரக்சா’ இயக்குநர் சஞ்சய்ராய் தலைமையில், மதுரையில் கடந்த ஆண்டு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் வந்து ஆய்வு செய்தனர். அதில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்குப் போதுமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதா? சாலை, விமான நிலைய வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆனாலும், தற்போது வரை கடன் அனுமதி வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader