டிக்டாக் வீடியோக்களை வாட்டர்மார்க் இல்லாமல் டவுண்லோடு செய்வது எப்படி?

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை மொபைலின் பயன்பாடு அதிகரித்துள்ளது. புதிய வீடியோக்களை டிக் டாக் போன்ற ஆப்பில் அப்லோட் மற்றும் டவுண்லோடு செய்து நேரத்தை கழித்து வருகின்றனர்.

 

டிக்டோக் வீடியோக்களை வாட்டர்மார்க் இல்லாமல் டவுண்லோடு செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

 

டிக்டோக் வீடியோக்களை, இனி வாட்டர்மார்க் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம்.

 

வெறும் 60 விநாடிகளின் உங்களின் புகழை ஊரரிய செய்யும் செயலிகளில் ஒன்று டிக்டோக். உங்கள் ஸ்மார்ட்போனில், வீடியோக்களை உருவாக்கி அவற்றை செயலியில் பதிவிட உங்களை அனுமதிக்கிறது. இந்த செயலியில் சில மேம்பட்ட எடிட்டிங் கருவிகளும் இதில் உள்ளன. திரைப்பட வசங்கள் பேசுவது போல் லிப் சிங் செய்வது, பாடலுக்கு நடனமாடுவது போன்ற அனைத்தையும் நீங்கள் உருவாக்க முடியும்.

 

இப்போது, டிக்டோக்-கே, அதன் வீடியோக்களைப் பதிவிறக்க அனுமதிக்கிறது. ஆனால், அந்த வீடியோவில் பெரிய வாட்டர்மார்க் இருக்கும்.

 

 

டிக்டோக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

வழிமுறைகள்:

1.உங்கள் போனில் டிக்டோக்கைத் திறந்து நீங்கள் பதிவிறக்க விரும்பும் வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.

2.Share Icon அழுத்தி வீடியோவைச் Save video-வை தேர்ந்தெடுக்கவும்.

3.இது உங்கள் போனின் ஸ்டோரேஜில் வீடியோவை தானாகவே save செய்யும்.

இவ்வாறு வீடியோக்களை பதிவிறக்கினால், அதில் வாட்டர்மார்க் இருக்கும்.

 

வழிமுறைகள்:

உங்கள் போன் அல்லது கணினியில் டிக்டோக்கைத் திறந்து நீங்கள் பதிவிறக்க விரும்பும் வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் போனில், ஷேர் பொத்தானை அழுத்தி, Copy Link-ஐ தட்டவும். இதேபோல், நீங்கள் கணினியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், பதிவிறக்க விரும்பும் வீடியோவைத் திறந்து முகவரிப் பட்டியில் இருந்து இணைப்பை copy செய்யலாம்.

www.musicallydown.com-ஐப் பார்வையிடவும், search box-ல் வீடியோ இணைப்பை paste செய்யவும்> “வீடியோவுடன் வாட்டர்மார்க்” அமைப்பை தேர்வு செய்யாமல்> பதிவிறக்கம் அழுத்தவும்.

அடுத்த திரையில், Download mp4-ஐத் தேர்ந்தெடுத்து அடுத்த திரையில் Download Video Now என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இதற்கு மாற்றாக, நீங்கள் in.downloadtiktokvideos.com அல்லது www.ttdownloader.com-ஐப் பயன்படுத்தியும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாம்.

 

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக டிக்டோக்கிலிருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்வோர், தாங்களே பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பதிவிறக்கிய வீடியோக்களை ஷேர் செய்தால், அசல் படைப்பாளரை குறிப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More