IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் தரமானது என்பதை எப்படி உறுதி செய்வீர்கள் ?

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தண்ணீர் மற்றும் சோப்பு இல்லாத இடங்களில் சானிடைசர் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. அந்த வகையில் வெளியே சென்றாலே ஹேண்ட் சானிடைசர் கொண்டு செல்வது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதனால் இன்று சானிடைசர் என்பது மிகப் பெரிய சந்தையைப் பிடித்திருக்கிறது எனில் அதில் மாற்றுக்கருத்து இல்லை. இப்படி ஒரு பொருள் பெரிய அளவில் விற்பனையாகும் போது அதைத் தொடர்ந்து போலிகளும் உருவெடுக்கும். அதுவும் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த போலிகளுக்கே மக்கள் நகர்கின்றனர்.

ஆனால் இந்த போலி சானிடைசரால் கொரோனா தொற்றை அழிக்க முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மை. எனவே விலை அதிகமாக இருந்தாலும் தரமானதாக பார்த்து வாங்க வேண்டியது அவசியம். அப்படி அது தரமானது என்பதை எப்படி கண்டறிவது என்பதை இங்கு காண்போம்.

இதற்கு தேவை டிஷ்யூ பேப்பர், கோதுமை மாவு, ஹேர் டிரையர் மற்றும் பால் பேனா.

முதலில் வீட்டில் டாய்லெட் , கை துடைக்க என பயன்படுத்தப்படும் டிஷ்யூ பேப்பரில் பால் பேனா கொண்டு ஒரு வட்டம் போடுங்கள். அதன் மேல் சானிடைசரை ஊற்றினால் பால் பேனா மை அழிந்து திட்டு திட்டாக மாறும். அவ்வாறு கரைந்தால் அது போலி. போட்ட வட்டம் போட்டபடி அப்படியே இருந்து பேனா மை அழியாமல் இருந்தால் அது ஒரிஜினல் சானிடைசர்.

Aromatics and Cosmetics


அடுத்த ஸ்டெப் கோதுமை மாவு. இதற்கு கோதுமை மாவுதான் வேண்டும் என்றில்லை எதுவாகவும் இருக்கலாம். ஒரு ஸ்பூன் மாவில் சானிடைசர் ஊற்றி பிசைந்தால் அது மாவுடன் கரைந்து சப்பாத்திக்கு உருட்டும் மாவு போல் பிசைய முடிந்தால் அது கலப்படம் கொண்ட சானிடைசர். ஒரிஜினல் சானிடைசர் ஊற்றினால் அது மாவுடன் கலக்காமல் திரி திரியாக உதிரும்.

மூன்றாவதாக தலையின் ஈரத்தை உறிஞ்சக்கூடிய ஹேர் டிரையர் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் சானிடைசர் ஊற்றி அதில் ஹேர் டிரையரைக் காண்பிக்கவும். அதில் ஊற்றிய சானிடைசர் அப்படியே தண்ணீராக இருந்தால் அது போலியானது. மாறாக ஊற்றிய சானிடைசர் ஈரப்பதமின்றி உறிஞ்சப்பட்டிருந்தால் அதுதான் ஒரிஜினல் சானிடைசர்.

இப்படி மேலே குறிப்பிட்ட மூன்று எளிய முறைகளைப் பயன்படுத்தி நீங்கள் வாங்கியது ஒரிஜினல் சானிடைசரா அல்லது போலியானதா எனக் கண்டறியுங்கள்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader