IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

யூடியூப் சேனலில் விரும்பிய மொழியினை மாற்றி அமைப்பது எப்படி ?

Get real time updates directly on you device, subscribe now.

கூகுள் தளங்களில் முக்கியமானவைகளில் ஒன்றான யூடியூப்பில் நாள்தோறும் பல மில்லியன் வரையான பயனர்கள் யூடியூப் தளத்தில் வீடியோக்களை பார்வையிட்டு வருகின்றனர். இத் தளமானது பொதுவாக ஆங்கில மொழியிலேயே கட்டளைகளைக் காண்பிக்கும்.

எனினும் தற்போது தாம் விரும்பிய மொழியில் யூடியூப் தளத்தின் கட்டளைகளை மாற்றியமைக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது. இதில் எவ்வாறு மொழியினை மாற்றியமைப்பதற்கு கீழ்வரும் படிமுறைகளைப் பின்பற்றவும்.

முதலில் தாம் விரும்பிய இணைய உலாவியினை திறக்கவும். அதில் யூடியூப் தளத்திற்கு சென்று காண்பிக்கப்படும் தமது கணக்கிற்கான படம் மீது கிளிக் செய்யவும். இப்போது மெனு ஒன்று தோன்றும். அவ்வாறு தோன்றும் மெனுவில் Language என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது தோன்றும் மெனுவில் தாம் விரும்பிய மொழியினை தெரிவு செய்து கிளிக் செய்தால் போதும் அம் மொழியில் யூடியூப் தளத்தின் கட்டளைகள் காண்பிக்கப்படும். இங்கு தமிழ் மொழியிலும் மாற்றியமைக்கக்கூடிய வசதி உள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader