IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கூகுள் குரோமில் DATA SAVER/LITE MODE ஆக்டிவ் செய்வது எப்படி?

Get real time updates directly on you device, subscribe now.

இணையதளங்களில் அதிக வேகமாக தரவிறக்கம் செய்யப்பட்டு காண்பிக்கப்படும் போது டேட்டாவின் பாவனையும் அதிகமாகவே இருக்கும். அன்லிமிட்டட் டேட்டா தரப்படாத நாடுகளில் இது ஒரு பிரச்சினையாகவே காணப்படுகின்றது.

இதனால் ஆண்டிராயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோம் உலாவியில் Data Saver/Lite Mode எனும் வசதி தரப்பட்டுள்ளது. இந்த வசதியினை செயற்படுத்துவதன் மூலம் குரோம் உலாவியானது தேவைக்கு ஏற்றாற்போல் டேட்டாவின் அளவினை கட்டுப்படுத்தி பயன்படுத்திக் கொள்ளும்.

இதனைச் செயற்படுத்துவதற்கு ஆண்டிராயிட் சாதனங்களில் குரோம் உலாவியினை முதலில் ஓப்பன் செய்ய வேண்டும். அதன் பின்னர் மேல்பக்கமக வலது புறத்தில் காணப்படும் 3 புள்ளிகளை கிளிக் செய்து மெனுவினை திறக்க வேண்டும்.

அப் பகுதியில் Settings என்பதில் Data Saver/Lite Mode என்பதை கிளிக் செய்து On செய்துகொள்ள வேண்டும். அதன்பின்னர் நமது இணையதளத்தின் பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல் டேட்டா செலவாகும்.

அதேப்போன்று கூகுளை பிரதான தேடுபொறியாக பயன்படுத்த பின்வரும் படிமுறைகள் வழியாக மாற்றியமைக்க முடியும். முதலில் கூகுள் குரோமினை ஓப்பன் செய்ய வேண்டும். அதன் பின்னர் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் 3 புள்ளிகளை அழுத்தி மெனுவினை கிளிக் செய்ய வேண்டும்.

அந்த மெனுவில் உள்ள Settings எனும் பகுதியில் உள்ள Search Engine என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்போது தோன்றும் மெனுவில் Google என்பதை தெரிவு செய்யவும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader