IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சிகிச்சைக்கு பயந்து ஓடிய மூதாட்டியை இறந்து விட்டதாக அறிவித்த அரசு மருத்துவமனை!

2

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் சிகிச்சைக்குப் பயந்து தப்பி ஓடிவிட்டார். அதனால் மருத்துவர்கள் மூதாட்டி இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறியதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் முகமது யூசப் (வயது 37). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சாயிரா பானு. முகமது யூசப் மதுகுடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.


சம்பவத்து அன்று இருவருக்கும் பெரிதாக தகராறு ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த முகமது யூசப் மனைவி சாயிரா பானுவை கத்தியல் குத்த முயன்றுள்ளர். அப்போது சாயிரா பானுவின் தாய் அரிதா பேகம் (வயது 63) அங்கு இருந்தார். மகளுக்கும் மருமகனுக்கும் இடையே நடந்த சண்டையை கவனித்த அவர், மகளை மருமகன் கத்தியால் குத்த முயன்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மகளை காப்பாற்றுவதற்காக சண்டையை விலக்க முயன்றார்.


அப்போது எதிர்பாராத விதமாக அரிதா பேகம் வயிற்றில் கத்திக் குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை உடனடியாக அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இது குறித்து பொள்ளாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த அரிதா பேகம் சிகிச்சைக்கு பயந்து தப்பி ஓடிவிட்டார். இதை பற்றி அரியாத டாக்டர்கள் மூதாட்டி அரிதா பேகம் இறந்து விட்டதாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்துக்கும், உறவினர்களிடமும் தெரிவித்தனர்.


தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனைக்கான ஏற்படுகள் செய்யப்பட்டன. அப்போது அரிதா பேகத்தின் சடலத்தைக் காணவில்லை. அதன்பிறகு விசாரணை நடத்தியபோதுதான் அரிதாபேகம் இறக்கவில்லை. சிகிச்சைக்குப் பயந்து ஓடி விட்டதாக தெரிய வந்தது.


இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அரிதா பேகத்தின் உறவினர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.