IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

‘நம்பிக்கை அதானே எல்லாம்’- பில்லியன் டாலர் வர்த்தகத்தை நோக்கி முன்னேறும் ‘கல்யாண் ஜுவல்லர்ஸ்’

Get real time updates directly on you device, subscribe now.

கேரளாவின் திருச்சூரில், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனர்களை சந்தித்து பேசும் போது, அவர்கள் நடைமுறை சார்ந்த உறுதியான முடிவுகள் மூலம் வர்த்தகத்தை வளரச் செய்துள்ள விதம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரியும்.

 

இந்த முடிவுகள் சனிக்கிழமைதோறும் நிறுவனர் டி.எஸ்.கல்யாணராமன் மற்றும் அவரது மகன்கள் ராஜேஷ் கல்யாணராமன், ரமேஷ் கல்யாணராமன் ஆகியோரால் மேற்கொள்ளப்படுகின்றன.

 

தங்கள் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்தபடி வர்த்தக காரணிகள் மற்றும், விற்பனை நிலையங்களின் செயல்பாடு பற்றி விவாதிக்கின்றனர். அடுத்த ஐந்தாண்டுகளில் வர்த்தகத்தை ரூ.20,000 கோடி அளவுக்கு விரிவாக்கம் செய்வதற்கான வழிகள் பற்றியும் விவாதிக்கின்றனர்.

 

அவர்கள் முடிவெடுக்கும் விதத்திற்கு இதோ இரு உதாரணம்: ஏழு ஆண்டுகளுக்கு முன் நிறுவனத்தை நவீனமயமாக்க விரும்பிய போது, இந்தியா முழுவதும் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு மென்பொருள் தான் சரியான தீர்வு என உணர்ந்தனர். இதற்காக கியுலிக் வியூ மற்றும் ஆரக்கில் நிறுவனங்களை தொடர்பு கொண்டு தங்களுக்கான பிரத்யேக மென்பொருள் தீர்வை உருவாக்கக் கோரினர்.

 

பெரும்பாலான குடும்ப நிறுவனங்கள், குறிப்பிட்ட நிலையை எட்டியதும் வர்த்தக அந்தஸ்த்திற்காக தொழில்நுட்பத்தை நாடுவது உண்டு. ஆனால் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனர்கள், தொழில்நுட்ப தரவுகளை தங்கள் நிர்வாகிகளிடம் சரியான கேள்வி கேட்க பயன்படுத்துகின்றனர். அவர்கள் எந்த எண்ணத்தையும் காது கொடுத்து கேட்கத் தயாராக உள்ளனர்.

 

கவனத்தை ஈர்க்கும் எணணங்களை குறித்து வைத்துக்கொண்டு சனிக்கிழமை கூட்டங்களில் விவாதிக்கின்றனர். இப்போதெல்லாம், ஸ்மார்ட்போனில் மூழ்கி உள்ள நவீன வாடிக்கையாளர்களை கவர்வது குறித்து ஆலோசிக்கின்றனர்.

 

டி.எஸ்.கல்யாணராமல், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம்

 

 

துவக்கம்

 

இருபது ஆண்டுகளுக்கு முன் கல்யாணராமன், தனது ஜவுளி வர்த்தகத்தை நகைக்கடையுடன் இணைத்தார். முதலில் ஒரு கடை தான் இருந்தது. அவரது கடையில் தங்க நகைகளை விற்கலாம் என்றும் வாடிக்கையாளர் சொன்னதைக் கேட்டு இந்த முடிவை மேற்கொண்டார்.

 

முதல் கடையில் தவறுகள் நிகழ்ந்தன. அவற்றின் மூலம் பாடங்கள் கற்றுக்கொண்டார். அவர் தருவித்திருந்த நகைகள் வாடிக்கையாளர்களை கவரவில்லை. ஊழியர்களுக்கும் அவற்றை விற்கத் தெரியவில்லை. பின்னர் அவர், சரியான நகைகளை, தானே தேர்வு செய்து, ஊழியர்களுக்கும் சிறந்த முறையில் பயிற்சி கொடுத்தார்.

 

இன்று, நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய சங்கிலித்தொடர் நகைக்கடை நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இதன் விற்றுமுதல் ரூ.10,000 கோடியாகும். டைட்டன் நிறுவனத்தின் தனிஷ்க் பிராண்டின் 180 கடைகளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் 94 கடைகளை கொண்ட நிறுவனமாக இருக்கிறது.

 

வேகமான வளர்ச்சி காரணமாக, நியூயார்க்கைச் சேர்ந்த தனியார் ஈக்விட்டி பண்ட் நிறுவனமான வார்பர்க் பின்கஸ், 2014 ல் குறைந்த பங்குகளுக்காக ரூ.1,200 கோடி முதலீடு செய்யத் தீர்மானித்தது. அப்போதே நிறுவனம் ரூ.9,500 கோடி அளவில் வர்த்தகம் பெற்றிருந்தது. வருவாயில் 10 சதவீதம் மொத்த லாப விகிதம் பெற்றிருந்தது.

 

மற்ற நகைக்கடை பிராண்ட்களும் விரிவாக்கத்தில் ஈடுபட்டிருந்தாலும், கல்யாண் ஜுவல்லர்ஸ் அளவுக்கு இல்லை. ஜாய் ஆலுக்காஸ் நாடு முழுவதும் 60 கடைகளை கொண்டுள்ளது. தென்னகத்தில் 30 கடைகள் உள்ளன.

 

எம்.பி.அகமதுக்கு சொந்தமான மலபார் ஜுவல்லர்ஸ் ஆகியவை இதே அளவு கடைகள் பெற்றுள்ளன. இவை எல்லாமே கல்யாண் ஜுவல்லர்சை நெருங்கிக் கொண்டிருந்தாலும், டி.எஸ்.கல்யாணராமன் நிகரமதிப்பில் முன்னிலையில் இருக்கிறார்.

”இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் பாரம்பரியமானவையாகவும், தங்கள் பிராந்தியத்திற்குள் விரிவாக்கம் செய்பவையாகவும் இருக்கின்றன. பெரிய அளவில் வளர ஒரே வழி என்பதால் இந்திய அளவில் விரிவாக்கம் செய்துள்ளோம்” என்கிறார் 64 வயதான கல்யாணராமன்.

 

“இப்படி பெரிய அளவில் வளர்ச்சி ஏற்படும் என்று நினைக்கவில்லை” என்கிறார் செயல் இயக்குனரான ராஜேஷ். ஆனால், தனக்கும் சகோதரரர் ரமேசுக்கும் நம்பிக்கையுடன் இருக்கவும், தினமும் கற்றுக்கொள்ளவும், வர்த்தகத்திற்கான நீண்ட கால தொலைநோக்கு கொண்டிருக்கவும் தந்தை கற்றுத்தந்துள்ளார் என்கிறார் அவர்.

 

வர்த்தக வியூகம்

 

நிறுவனம் தனது வர்த்தக திட்டத்தை நான்கு வகையாக பிரித்திருக்கிறது. ரீடைல் வியூகத்திற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கியுள்ளது.

 

தயாரிப்பு:

 

உள்ளூர் கலாச்சாரம் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப நகை வடிவமைப்பு அமைகிறது. இதனால் தான் அதன் நகைகள் ஒவ்வொரு மாநில கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் அமைகிறது. எனினும் கர்நாடகம், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திராவில் தங்கம் அதிகமாக இருக்கும்.

 

வட மாநிலங்களில் வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்களை வாங்குவது அதிகமாக இருக்கும். இருந்தாலும் இந்திய பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவது அதிகரித்திருப்பதால் கற்கள் பதித்த லேசு ரக நகைகள் பிரபலமாகி வருகின்றன.

 

வடிவமைப்புகள் அனைத்தையும் கல்யாண் ஜுவல்லர்ஸ் மேற்பார்வையில் 750 துணை ஒப்பந்ததாரர்களால், மூன்று உற்பத்தி மையங்களில் உருவாக்கப்படுகிறது. சொந்தமாக உற்பத்தி ஆலை திறக்க திட்டமிட்டுள்ளது. பெண்களின் அனைத்து வயதினருக்குமான 13 பிராண்ட்களை கொண்டுள்ளது.

 

ரீடைல்:

 

வாடிக்கையாளர்களை சென்றடைந்து சேவை அளிப்பதற்காக 100 நகரங்களில் 650 ‘மைகல்யாண்’ ஸ்டோர்களை பெற்றுள்ளது. 800- 1000 சதுர அடி கொண்ட கடைகள் பல நகரங்களில் உள்ளவர்களுக்கு சேவை அளிக்கும் மினி நகை கடைகளாக செயல்படுகின்றன.

 

அடுத்த மூன்று ஆண்டுகளில் பெரிய கடைகளின் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு கடையும் 25,000 சதுர அடி கொண்டது. மேலும் சர்வதேச விரிவாக்கத்தின் கீழ் வளைகுடாவில் 20 கடைகளை கொண்டுள்ளது. ஃபிளிப்கார்ட் மூலம் சிறிய நகைகளை விற்கவும் சோதனை முறையில் முயன்று வருகிறது.

 

“ஒவ்வொரு சந்தையின் தன்மையையும் முழுவதுமாக ஆய்வு செய்த பிறகே கடைகளை துவக்குகிறோம்” என்கிறார் செயல் இயக்குனரான ரமேஷ். குறிப்பிட்ட பகுதியில் உள்ள வருமான அளவைக் கொண்டு வர்த்தக தரவுகள் அமைவதாக அவர் சொல்கிறார். “

 

பல இடங்களில் முறையான தரவுகள் இல்லை. இடங்களை தேர்வு செய்யும் போது ரிஸ்க் எடுக்க வேண்டும்: என்கிறார் அவர். 18 மாதங்களில் லாபம் ஈட்ட வேண்டும் எனும் இலக்கு இருப்பதாக கூறுகிறார். அதன் பெரிய கடைகளில் 80 சதவீத கடைகள் லாபமீட்டுகின்றன. மற்றவை லாப பாதையில் முன்னேறுகின்றன.

 

நிதி:

 

‘மைகல்யாண்’ கடைகளை ஒரே தளத்தில் கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக சர்வதேச நிறுவன சேவையை நாடி வருகிறது. ஒவ்வொரு பெரிய கடையிலும் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளது.

ஒராண்டில் 10 கடைகள் துவக்க திட்டமிட்டுள்ளது. தங்க விலைக்கு எதிரான பாதுகாப்பை பெறும் வகையில் முன்பேர சந்தையில் தேவையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

தொழில்நுட்பம்:

 

வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த ஸ்மார்ட்போன் நுட்பங்கள் மற்றும் வாடிக்கையாளர் தேவையை அறிய அனல்டிக்ஸ் நுட்பங்களை நாடி வருகிறது.

 

நிறுவன சி.ஓ.ஓ சஞ்சய் ரகுராமன், “வாடிக்கையாளர்களுடன் சிறந்த முறையில் தொடர்பு கொள்ளும் வழிகளுடன் பல ஸ்டார்ட் அப்கள் எங்களை நாடுகின்றன.

 

ஆனால் யாரையும் இன்னமும் தேர்வு செய்யவில்லை. ஸ்டார்ட் அப்கள் முதலில் எங்கள் வர்த்தகத்தை புரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார்.

 

கல்யாண் ஜுவல்லர்ஸ் 3 பில்லியன் டாலர் வர்த்தகத்தை நோக்கி முன்னேறுகிறது. பாரம்பரிய நகைக்கடைகள் தான் அதன் போட்டியாக இருக்கிறது. அமிதாப் பச்சன் போன்ற நட்சத்திரங்களை விளம்பர தூதராக பெற்றிருந்தாலும், மற்ற நகைக்கடைகளை விட வேகமாக வளர்ந்து வருவதாலேயே இது சாத்தியமாகிறது.

 

மதுரை சம்பந்தமான தகவல்கள் , செய்திகள் , நிகழ்ச்சிகள் , நிறுவனத்தின் வெற்றி கதைகள் , புகைப்படங்கள் இலவசமாக பதிவிட Click : http://in4madurai.com/quickpost/

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader