IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தேன் மூலம் உங்கள் சருமத்தை மென்மையாகவும் அழகாகவும் மாற்றுவது எப்படி?

Get real time updates directly on you device, subscribe now.

தேனைப் பயன்படுத்தி மிக எளிமையான முறையில் உங்கள் சரும அழகைப் பராமரிக்கலாம்.

தேன் இன்று பலருக்கும் சர்க்கரைக்கான மாற்று உணவுப் பெருளாக மாறியுள்ளது. அந்த வகையில் பலருடைய வீட்டிலும் தேன் இருக்கக் கூடும். அதை வைத்து எளிமையான முறையில் உங்கள் சரும அழகைப் பராமரிக்கலாம். எப்படி என்பதை இங்கு காண்போம்.

தேன் மற்றும் எலுமிச்சை : எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சருமப் பராமரிப்பிற்கும் அவசியமானது. பாதி எலுமிச்சையும் ஒரு ஸ்பூன் தேனும் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் பேஸ்ட் போல் நன்கு கலந்து முகம் கழுத்தை சுற்றிலும் அப்ளை செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து செய்ய முகம் பளபளப்பாக மாறும்.

Aromatics and Cosmetics

தேன் மற்றும் பட்டை : பட்டை முகப்பருக்களை நீக்குவதில் சிறந்தது. எனவே பட்டையைப் பொடியாக்கி தோடு தேன் கலந்து குழைத்துக்கொள்ளுங்கள். பின் சருமத்தில் பேக் போல் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

தேன் மற்றும் தக்காளி : சருமத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் செல் திசுக்களை பழுது பார்ப்பதில் தக்காளி நல்லது. எனவே தக்காளி சதை 1 ஸ்பூன் மற்றும் தேன் 1 ஸ்பூன் என எடுத்து நன்குக் கலந்துகொண்டு முகத்தில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். நல்ல பலனைப் பெறுவீர்கள்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader